கனவுகள் பல விதம் ! ஆழ் மனத்தின் வெளிப்பாடுகளே கனவுகள் என நம்புபவர் பலர் . கனவில் பாம்பு வந்தால் செக்ஸ் என்றார் சிக்மன்ட் பிராய்ட் . காசு வரவு என்கிறார் என் நண்பர் ஒருவர். பாம்பு தோஷம் நாக தேவதைக்கு பூஜை செய்யவேண்டும் என்கின்றார் பூசாரி. நேஷனல் ஜாகரபி அடிக்கடி பார்த்தல் காரணம் என்கிறார் ஒரு நண்பர். மொத்தத்தில் கனவுகள் தெரிவிப்பது என்ன என்பது யாருக்கும் விளங்கவில்லை. கனவுகளும் நம் விருப்பத்துக்கு ஏற்ப வருவதில்லை. பிரச்னைகளுக்கு கனவில் விடை கிடைக்கும் என நம்புபவர் பலர். ஆனால் அப்படி வருவதில்லை. ஆழ்ந்த உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் மனதை ஆல்பா நிலையில் கொண்டு வந்து நம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்று ஓர் அறிஞர் கூறுகிறார். நம்புபவர்களும் பின்பற்றுவோரும் நிறையவே இருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் கருத்து கூறுமளவு நமக்கு ஞானம் இல்லை. என் கனவு காசு கனவு. அடிக்கடி வருகிறது. பேராசைதான் காரணம் என்று முடிவு கட்டாமல்( உண்மை என்னமோ அதுதான்) என் கனவுக்கதை கேளுங்கள்.
சில்லறை காசு முதல் புதையல் வரை பல கனவுகள்! ஒரு இடத்தில காசு இருந்து அதை எடுத்தால் இன்னும் இன்னும் நிறைய காசுகள் சுற்றி கிடக்கின்றன. முடிவே இல்லை ! எழுந்து பார்த்தால் எட்டணா கூட கிடையாது.
இதன் முன்னேற்ற பாதையிலே தற்போது வரும் கனவு பூமிக்கடியிலே புதையல்! கனவு என்னமோ மெகா சீரியல் மாதிரி முடிவு தெரியாத விதத்தில் போய் கொண்டிருக்கிறது . நான் இதை ஆழ் மன முடிவுக்கு விட்டு பிரயோஜனமில்லை என்று என் புதையல் கனவை என் அறிவு ஆராய்ச்சிக்கு கொண்டு வந்து செயல் முடிவு காண நினைத்தேன். நான் செய்தது தப்பு என்று இப்போது புரிகிறது!
சரி, இப்போதைக்கு இந்த விவரம் போதும் என்று விட்டு விட்டேன். சரி , பூஜை ஆகி விட்டது , பலியும் கொடுத்து விட்டோம் என்று வைத்துக்கொண்டு என் கனவு சீரியல் நினைவில் தொடர்ந்தது . புதையல் கிடைத்தாலும் அது அரசுக்கு சொந்தமென்று வந்தால் ? ஆகவே புதையலை ரஹ்ச்யமாகதான் எடுக்க வேண்டும். களைப்பில் தூங்கி விட்டேன்.
கனவில் மறுபடியும் புதையல். யாரையும் நம்பி கூப்பிட முடியாது. நாமேதான் தோண்ட வேண்டும். யாரை கூப்ட்டாலும் பங்கு கேட்பார்கள் பின்னர் காட்டி கொடுத்து விடுவர்ர்கள். அப்புறம் என்ன ? ரைடுதான் . வட்ட ஆட்சியர் , வருவாய் ஆட்சியர் , காவல் துறை அதிகாரிகள் , வேடிக்கை பார்க்க பெரும் கும்பல், போதாத தற்கு தொலை காட்சி காமெரா வேறே ! புதயலுடன் என் வீட்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி! ஐயோ வேண்டாம் , தனித்து இயங்குவோம் என்று கடப்பாரையடன் களத்தில் இறங்கினேன். இரண்டு மணி நேர முயற்சிக்கு பின்னர் கடப்பாரை எங்கோ இரும்பு பெட்டியில் இடித்தார் போல் கேட்டது. ஆஹா, கிடைத்தது நம் புதையல் !
பெட்டி ஒரு சிறிய பெட்டிதான் , இரண்டு அடிக்கு மூன்று அடி இருக்கும். அதை அசைக்கவே முடியவில்லை . சரி நாளைக்கு பார்க்கலாம் என்று கனவு முடிந்தது.
சில்லறை காசு முதல் புதையல் வரை பல கனவுகள்! ஒரு இடத்தில காசு இருந்து அதை எடுத்தால் இன்னும் இன்னும் நிறைய காசுகள் சுற்றி கிடக்கின்றன. முடிவே இல்லை ! எழுந்து பார்த்தால் எட்டணா கூட கிடையாது.
இதன் முன்னேற்ற பாதையிலே தற்போது வரும் கனவு பூமிக்கடியிலே புதையல்! கனவு என்னமோ மெகா சீரியல் மாதிரி முடிவு தெரியாத விதத்தில் போய் கொண்டிருக்கிறது . நான் இதை ஆழ் மன முடிவுக்கு விட்டு பிரயோஜனமில்லை என்று என் புதையல் கனவை என் அறிவு ஆராய்ச்சிக்கு கொண்டு வந்து செயல் முடிவு காண நினைத்தேன். நான் செய்தது தப்பு என்று இப்போது புரிகிறது!
புதையல் என் வீட்டு தோட்டத்தில் இருக்கிறது. எவ்வளவு ஆழத்தில்? ரொம்ப நாள் முன்னர் யாரோ குறு மன்னர் புதைத்தது. ஆகவே எப்படியும் 10 அடி கீழேதான் இருக்கும் . அதை தோண்டி எடுப்பது கஷ்டம் . மேலும் என் வீடு இருப்பது திருச்சியில் . ஆகையால் என் கனவும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் எங்கு என்று தெரியாது. என் நண்பர் ஒருவரிடம் பொதுவாக புதையல் எடுக்கும் விதத்தை விசாரித்தேன். அவர் சீரியஸ் ஆகி விட்டார். நிஜமாகவா சார் ? இதையெல்லாம் எடுப்பது கஷ்டம் சார். புதையல் ஒரே இடத்தில இருக்காது தெரியுமா? நகர்ந்து கொண்டே இருக்கும் சார் ; அததோடு அது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்களுத்தான் கிடைக்கும். கிடைக்காதவர்களுக்கு கிடைக்காது என்றார். சரி, எனக்கு கிடைக்கவேண்டும் என்றால் என்ன செய்ய என்றேன் . " புதயலை பூதம் காக்கும் சார் ", " முதலில் அதற்கு கர கிங்கரர்களை எழுப்பி கிங்கர பூஜை செய்ய வேண்டும் " என்றார் நண்பர். கர கிங்கர பூஜையா , கேட்கவே பயமாக இருக்கிறதே என்றேன் நான். புதையல் என்றால் சுலபமில்லை சார், பூஜை செய்து முடித்த பின் பலி கொடுக்க வேண்டும் என்றார் . பலியா , என்ன பலி ? " அது புத்யலின் தன்மைக்கு ஏற்றபடி இருக்கும் "
"கோழி பலியா அல்லது நர பலியா என்று கர கிங்கரர்கள் முடிவு செய்வார்கள் " என்றார் நண்பர். ஏக்தா கபூரையே எள்ளி நகையாடும் விதத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டதாகி விட்டது என் கனவு சீரியல். என்ன இருந்தாலும் முன் வைத்த கனவை பின் வைக்க முடியாது அல்லவே. மேலும் விவரம் கூறும் என்றேன். " பூஜை முடித்த பின்னர் அமாவாசை நாளில் , நள்ளிரவில் அகல் விளக்கு வெளிச்சத்தில் தோண்ட ஆரம்பிக்க வேண்டும் என்றார்.சரி, இப்போதைக்கு இந்த விவரம் போதும் என்று விட்டு விட்டேன். சரி , பூஜை ஆகி விட்டது , பலியும் கொடுத்து விட்டோம் என்று வைத்துக்கொண்டு என் கனவு சீரியல் நினைவில் தொடர்ந்தது . புதையல் கிடைத்தாலும் அது அரசுக்கு சொந்தமென்று வந்தால் ? ஆகவே புதையலை ரஹ்ச்யமாகதான் எடுக்க வேண்டும். களைப்பில் தூங்கி விட்டேன்.
கனவில் மறுபடியும் புதையல். யாரையும் நம்பி கூப்பிட முடியாது. நாமேதான் தோண்ட வேண்டும். யாரை கூப்ட்டாலும் பங்கு கேட்பார்கள் பின்னர் காட்டி கொடுத்து விடுவர்ர்கள். அப்புறம் என்ன ? ரைடுதான் . வட்ட ஆட்சியர் , வருவாய் ஆட்சியர் , காவல் துறை அதிகாரிகள் , வேடிக்கை பார்க்க பெரும் கும்பல், போதாத தற்கு தொலை காட்சி காமெரா வேறே ! புதயலுடன் என் வீட்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி! ஐயோ வேண்டாம் , தனித்து இயங்குவோம் என்று கடப்பாரையடன் களத்தில் இறங்கினேன். இரண்டு மணி நேர முயற்சிக்கு பின்னர் கடப்பாரை எங்கோ இரும்பு பெட்டியில் இடித்தார் போல் கேட்டது. ஆஹா, கிடைத்தது நம் புதையல் !
பெட்டி ஒரு சிறிய பெட்டிதான் , இரண்டு அடிக்கு மூன்று அடி இருக்கும். அதை அசைக்கவே முடியவில்லை . சரி நாளைக்கு பார்க்கலாம் என்று கனவு முடிந்தது.
சரி, அதன் உள்ளே என்ன இருக்கும் ? அனந்த பத்மநாபா சுவாமி ஆறாம் அறை போல அரவங்கள் இருக்குமோ? தங்கம் இருந்தால் அதை எப்படி காசாக்குவது? அப்படியே விற்க போனால் நிச்சயமாக தெரிந்து விடும். ரைடு தான். ஆகவே உருக்கி விற்று விடலாம். ஆனால் உருக்குவது எப்படி ? பொற் கொல்லரை கூப்பிட்டால் போட்டு கொடுத்து விடுவார என்றாள் மனைவி .
அட சீ, கனவு கனவுதான் , நிஜம் நிஜம் தான், இந்த ரீ மிக்ஸ் நமக்கு சரி வராது என்று புரிந்து விட்டது. ஆழ் மனதை அலசவும் வேண்டாம் அதன் அர்த்தங்கள் புரியவும் வேண்டாம். கனவுகள் இனிய கனவுகளாகவே இருக்கட்டும்.. நாம் நாமாகவே இருப்போம் !
Engal nilathil puthayal eduppathu pola kanavu kanden
பதிலளிநீக்கு