ஞாயிறு, 30 செப்டம்பர், 2012


WRONG APPROACH !!

Capt Neil Roberts ambled slowly towards his aircraft 4R-AJL, a turboprop aircraft, sitting on Bay-5 in the Katunayake International Airport, Srilanka, waiting for departure on its scheduled flight UL-207. First Officer William had already gone to the aircraft and the aircraft was now boarding.
The weather was clear with blue sky and there was no forecast for any adverse weather conditions enroute.
Capt Neil, boarded the aircraft, said hello to the chief cabin executive and entered the cockpit and positioned himself. First officer williams had already prepared the cockpit for departure.
With formal exchange of greetings, Capt.Neil called up ATC for Start up and taxi clearance.
ATC Colombo cleared UL207 to start up and cleared the aircraft to taxi out to the active runway 04, enter the runway and line up.
Capt UL207 taxiied to runway. Called up ATC
Tower UL207 Request ATC departure instructions
UL207 copy ATC – Colombo clears UL207- Colombo to Trichy- Via Flight Plan Route- To cruise and maintain FL 160 – Departure after take off Runway 04- Turn left, intercept radial 345 and climb to cruising level unrestricted.
Roger-Copied –Request Take off
UL207 Cleared for Take off- surface wind 050 degrees 06 Knots
Roger – Rolling
UL207 made a smooth take off, slowly turned left while climbing and set course., towards its destination.
Mr.Kenneth George was on morning duty in ATC control- Trichy. With two departures already gone, the only arrival was UL207 from Colombo, expected at 1030hrs.
Capt Neil was 60 miles out of Trichy and called up. Mr.George heard his call and responded to the aircraft and passed local weather to pilot.
AT 1020hrs Capt Neil called up ATC Trichy:
Trichy Tower- UL 207- I have your field in sight- Request permission for a straight in approach for Runway 27.
George cleared the aircraft for straight in approach and advised the aircraft to report finals
UL207 agreed
At 1023, UL207 reported finals for Runway 27. Mr.George, who was looking somewhere else through his binoculars, cleared the aircraft to land.
UL207 you are cleared to land- Surface wind 290 deg 04knts.
Capt.Neil Roberts, was in fact, was on finals to a disused second world war aerodrome, near Tanjore, 15 miles East of Trichy, Not knowing the wrong approach, he made a smooth landing on the disused runway. And cut his speed.
‘There was something seriously wrong’ he thought. There were no Crash Fire Tenders and no ATC building at all !
He realised now that he had landed at the wrong airport !
Mr.George called up UL207 for taxi clearance, but to his horror found that there was no aircraft ! What happened ? Has he crashed ? He gave numerous calls- No answer !
Meantime, Neil quietly backtracked on the runway to the beginning and took off again- As the aircraft was speeding down the runway on take off roll, he saw a man standing near the building and watching the aircraft !


As he climbed, he gave a call to ATC Trichy. George felt greatly relieved. The airacraft reported for finals again within 5 minutes and landed at Trichy.
After blaming each other for lapses, both the controller and the pilot decided to push the case under the carpet.


Exactly, after one month, Mr.George got a letter from his headaquarters- to explain the reasons for not submitting an incident report into the case of wrong approach and landing and the reasons ! The man in the disused airport, who was the care taker, made a complaint to Headquarters that an aircraft with registration 4R AGL, made a landing but took off without paying landing charges. The time and date along with the registration let the cat out of the bag !

வியாழன், 27 செப்டம்பர், 2012

TAMIZHAN


ஜாதி ஒழிக- தமிழ் வாழ்க!
என் வீட்டு நாய் லப்ரடோர்
very ferocious !

கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புபவன் அயோக்கியன் 
ஊரில் என்பெயர்  ராமசாமி

குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூழுக்கு வழி இல்லை
கும்பிடும் சாமிக்கு பாலபிஷேகமா
அம்பாளை தரிசனம் செய்தீரே - என்றால் 
அங்காளம்மனக்கு அங்கலாய்ப்பு வேண்டாம் என்றுதான் - 

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
கொண்ட காரியத்தில் கண் வைய்யடா தாண்டவக்கோனே
ஆரியர் யார் என்று அறியாத தாண்டவக்கோனே
ராவணனே பார்பனன் தான் தாண்டவ்கோனே 
ராவணனை தமிழன் என்றால் தாண்டவகோனே
அனைத்து சிங்களவரும் தமிழர்தானே தாண்டவகோனே!

சனி, 11 ஆகஸ்ட், 2012

NAADI ASTROLOGY !!


நாடி ஜோதிடம் என கூறப்படும் இந்த ஆரூடம் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் , சிதம்பரம் அருகே வைதீஸ்வரன் கோயில் என்னும் ஊரிலும் , மற்றும் திருச்சி அருகே திருவானைகாவிலும்  பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த வகை ஜோதிடத்தில் நம்முடைய வாழ்க்கை நிகழ்சிகள் அனைத்தும் ஏட்டு சுவடிகளில் பதிவாகி இருக்கும். இந்த ஏட்டு சுவடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முனிவர்களால் எழுதப்பட்டு , தற்சமயம் ஜோதிடர்களால் நமக்கு தெரியப்படுத்தப்படும் ஆரூடம்.   பொதுவாகவே எனக்கு இவ்வகை ஜோதிடங்களில் அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

அப்போது நான் திருச்சியில் பணி புரிந்து வந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நாடி ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜோதிடம் பார்க்க வேண்டும் என அவர் கூற, நானும் அவருடன் திருவானைக்கா சென்றோம். நாடி ஜோதிடர் இருந்த இடத்தை கண்டு பிடிக்க சிரமம் எதுவும் ஏற்படவில்லை. எனக்குள் பல சந்தேகங்கள். இது என்ன நம் முற்கால முனிவர்களுக்கு நம் ஜோதிடம் எழுதி வைப்பதில் என்ன ஆர்வம்? எல்லோருக்கும் எவ்விதம் எழுத முடிந்தது ? அமெரிக்கா ருஷ்யா போன்ற நாடுகளில் வசித்து வரும் மக்களுக்கு எழுதப்பட்டு இருக்குமா?  இதில் முன் ஜென்ம நிகழ்சிகளையும் , வரும் ஜென்ம நிகழ்சிகளையும் எவ்விதம் எழுதினர்? அவை அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , நம் வாழ்க்கை நம் கையிலே இல்லையா? நம் வாழ்க்கையில் நமது சுதந்திரம் என்ன?  மேலும் இந்த ஜோதிடம் பலரால் கூறப்படும்போது ஏட்டு சுவடிகள் எல்லோருக்கும் எவ்விதம் கிடைத்தது? இதை எழுதியதாக கூறப்படும் முனிவர்களின் நோக்கம் என்ன? இது போன்ற பல சந்தேகங்களுடனே சென்றேன்.


ஜோதிடர் இருந்த வீடு ஒரு மாடி வீடு. உள்ளே சென்றோம். ஜோதிடர் மாடியில் இருப்பதாகவும் சென்று பார்க்கலாம் என்றும் அங்கு இருந்தவர் கூறினார். மேலே மாடியில் ஒரு பெரிய ஹாலில் ஜமக்காளம் விரிக்கப்பட்டு அங்கே ஜோதிடம் பார்க்க வந்தவர் சிலர் அமர்ந்திருந்தனர். ஜோதிடரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.  எங்கள்  பெரு விரல் அச்சு ( மையில் ஒற்றி ) எடுத்துக்கொண்ட ஜோதிடர் , " உங்கள் சுவடிகளை தேடி வைக்கிறேன். நீங்கள் நாளைக்கு வாருங்கள்" என அனுப்பி வைத்தார். எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. எனது நண்பரிடமும் சொன்னேன். " சரி பரவாயில்லை - நாளை வந்து பாப்போம்" என்றார்.

அடுத்த நாள் மறுபடியும் அவரிடம் சென்றோம். எங்களை அமர சொன்ன அவர் உள்ளே சென்று சில சுவடிகளை கொண்டு வந்தார். எங்களிடம் " நான் இந்த சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் பெயர்களுடனும் மற்ற விவரங்களுடனும் ஒத்திருந்தால் , அதை மேலே படிக்கிறேன். இல்லாவிடில் , மற்ற சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் சுவடிகள் வரும் வரையில்" என்றார்.

முதலில் எனக்கு ஜோதிடம் பார்ப்பதாக சொன்ன அவர் சில சுவடிகளை படிக்க ஆரம்பித்தார். என் பெயர் சரியாக இருக்கும்- ஆனால் தொடரும் விவரங்கள் சரியாக இருக்காது. கடைசியில் ஒரு சுவடி எடுத்து அவர் படிக்க ஆரம்பித்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன்!!
என் பெயர் சரியாக இருக்க, என் தந்தை தாயார் பெயர்கள், என் வயது , என் உடன் பிறந்தோர் விவரங்கள் அனைத்தும் அந்த சுவடியில் இருந்தன!


அந்த சுவடிகளை அவர் எனக்கு காண்பித்தார். மிகவும் பழைய சுவடிகள்தாம். அனைத்தும் பாட்டு வடிவத்தில் ( தமிழில்) எழுதப்பட்டு இருந்தன. முதலில் அவர் என்னுடைய பிறந்த நாள், அன்றைய கிரக நிலைகள், பிறந்த நேரம் ( நாள்- மணி-நிமிடங்கள்-) அனைத்தும் இருந்தன. அவரிடம் நான் சென்ற சமயத்தில் என் வயது, நான் பணி புரிந்து வந்த இடம், என் குழந்தைகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருந்தன. பின்னர், என் வருங்கால நிகழ்சிகள் அனைத்தும் எழுதப்பட்டு இருந்தன. அவை அனைத்தையும் ஓர் நோட்டு புத்தகத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். என் நண்பருக்கு அன்று சுவடிகள் கிடைக்க வில்லை. அதற்கு அடுத்த நாளும் சென்று அவருக்கும் பார்த்தோம்.
இதற்கு நான் ஜோதிடருக்கு கொடுத்தது  Rs 500  மட்டும்தான்.


திரும்பி வரும்  வேளையில், எனக்குள் பல எண்ணங்கள். இவருக்கு எப்படி இந்த விவரங்கள் கிடைத்தன? ஒருக்கால் முதலில் படித்த சுவடிகளின் மூலம் நான் கொடுத்த விவரங்களை வைத்து சொல்கிறாரோ?  அது இருக்க வாய்ப்பில்லை. என் மனதை படித்து சொல்லி இருப்பாரோ? அதுவும் இருக்க வாய்ப்பில்லை- ஏனெனில் என்னுடைய ஜாதகம் எனக்கே சரியாக தெரியாது. மிகுந்த குழப்பத்துடனே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் இருந்த என் ஜாதகத்தை எடுத்து பார்த்தபோது எல்லா விவரங்களும் சரியாக இருந்தன!

இந்த நாடி ஜோதிடத்தில் நான் விஞ்ஞான ரீதியாகவோ அல்லது என் பகுத்தறிவு ஆராய்ச்சி மூலமாகவோ ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கு புரியாத , மூளையால் பகுத்தறிய முடியாத நிகழ்ச்சி இது.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இது நடந்து ஒரு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. வருங்கால நிகழ்வுகள் என அவர் எழுதி கொடுத்திருந்தவைகள் பல தவறாக இருக்கிறது!  அவர் எழுதி இருந்தது போல் நடக்க வில்லை !!

இருக்கும் நிகழ்ச்சிகளையும், சென்றவைகளையும் சரியாக சொல்லும் இந்த நாடி ஜோதிடம் ஏன் வருங்காலத்தை சரியாக கூற வில்லை?
என்னுள் எழும் பல ஐயங்களுக்கு இன்னும் விடை இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது முனிவர்களுக்கும் இந்த சுவடிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதன் உண்மையான விவரங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என்பது ஒரு சாத்தியக்கூறு  ! பார்க்கலாம்-  வேறு எதாவது தெரிந்து கொள்ளும் போது இதன் மர்மங்கள் புலப்படலாம!!











திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ALL IS WELL THAT ENDS WELL !!!


அண்மையில் ஒரு ருசிகரமான செய்தி படித்தேன். ஊருக்கு பொதுவான கிணறு ஒன்றில் இரண்டு  ௫௦௦500  காசு தாள்கள் மிதந்து கொண்டிருப்பதை கிராம மக்களில் யாரோ பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து காண்பித்தாராம் .  உடனே நம்மூர் கலாச்சாரப்படி அவரவர் தனக்கு தோன்றியதை வதந்தியாக பரப்பினர். சிபிஐ ரைடுக்கு  பயந்து யாரோ ஒரு பெரும் பணக்காரர்  பாலிதீன் மூட்டையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து கிணற்றில் கொண்டுவந்து வீசி விட்டு சென்றதாகவும் , (பின்னர் எடுத்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில்!) அது கொண்டு வரப்பட்ட காரை பார்த்ததாகவும் சொல்ல, நம் கிராம மக்கள் உடனேயே செயல் வீரர்களாகினர்!!

நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று உடனேயே செயல் படுத்தப்பட்டு; கிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரும்
 ' மூட்டை '  கண் படாததால் , தூர் வாரி , சேறு மண் வெளியேற்றப்பட்டது. அப்போதும்  மூட்டை கண்படவில்லை. ஏமாற்றமடைந்த மக்கள் " அப்போதே நினைத்தேன் " போன்ற வசனங்களை உதிர்த்து விட்டு,  நீர் இறைக்கவும், தூர் வாரவும் ஆனா செலவை பொது செலவாக்கி சென்றனர்.

எது எப்படியோ , சுத்தம் செய்யப்படாத ஊர் கிணறு சுத்தமானது.!
இந்த வதந்தி இல்லாவிட்டால், யார் அந்த கிணறை கவனிக்க போகிறார்கள்?

இதன் பின்புல ஆராய்ச்சியாக , மக்களின் நம்பிக்கை பொதுவாக இயற்கையை ஒட்டியதாக இல்லாமல், "பர பரப்பான"  கற்பனைகளை ஒட்டியதாகவே  இருக்கிறது.  இதை பயன் படுத்திதான் நம் செய்தி தாள்கள் ( அனைத்தும் அல்ல- ) பிழைப்பு நடத்துகின்றன!

ஒரு சமயம் பரபரப்பு செய்தி ஒன்று- " ராஜா ஜிக்கி" கல்யாணம். ! சரியாக பார்க்காத மக்கள் ஆர்வத்துடன் செய்தி தாளை வாங்கி பார்த்தால், பின்னணி பாடகர்கள் " திரு ராஜா அவர்களும் , செல்வி ஜிக்கி அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்!

" பிரதமர் இந்திரா ஜட்டியுடன் பறந்தார்!! இது என்னடா கொடுமையாக இருக்கிறதே என்று பார்த்தால், பிரதமர் இந்திரா , உதவி ஜனாதிபதி திரு ஜட்டி உடன் விமானத்தில் செல்கிறார்!

என்ன தெரிகிறது? வதந்தி என்னும்போது, மூளை செயலற்று , ஆசைகளும் உணர்ச்சிகளும் அந்த செய்திக்கு அர்த்த வடிவம் கொடுக்கின்றன.  நேர் அர்த்தத்தில்  எந்த பரபரப்பும  இல்லை. இந்த வதந்திகளின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் புலம்பல்களை யார் கவனிக்கிறார்கள்  ?

செவ்வாய், 31 ஜூலை, 2012

BEWARE OF POLICE!!

"நீர் உடனே புறப்பட்டு  கீழே குறித்த இடங்களை 'விசிட்' செய்து,  அங்கே ஏதும் குற்றம்,மது, சூது , திருட்டு போன்றவை எதுவும் நடவாமல் பார்த்திருந்தும், வெளியே இருக்கும் கேடிகள் குற்றம் எதிலும் ஈடுபடாமல் பார்த்தும் , சாயங்காலம் 5 மணிக்கு ஸ்டேஷன் திரும்ப வேண்டியது".

"என்ன இது என்று யோசிக்கிறீர்களா?  நானே சொல்கிறேன். இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. இது ஒரு போலீஸ் 'கான்ஸ்டபில் 'பீட் செல்வதற்கு அவர் சார்ஜன்ட் அல்லது ஸ்டேஷன் ரைட்டர் அவர் வைத்திருக்கும் நோட் புத்தகத்தில் எழுதி கொடுத்து அனுப்பும் குறிப்பு. இந்த நோட் புக்குடன் அவர் எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்து , அங்கங்கே இருக்கும் முக்கியமானவர்களிடமிருந்து கைஎழுத்து பெற்று , ஸ்டேஷன் செல்வார். என் அலுவலகம விமான நிலையம் என்பதால் அங்கு வருவார். என்னிடம் தினம் கையெழுத்து வாங்கி செல்வார்.

ஒரு நாள், எனக்கு வேலை ஒன்றும் இல்லாத போது , இதை படித்து ஆச்சர்யமானேன். அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.

" ஆமாம் , நீங்கள் செல்லும் இந்த இடங்களில் ஏதேனும் குற்றம் நடந்தால் ஒரு ஆளாக என்ன செய்வீர்கள்?"

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க விட மாட்டோம் சார், எங்களுக்கு தெரியும், எவன் எப்போது என்ன செய்வான் என்று. அப்படி மீறி ஏதேனும் நடந்தால் கூட ஸ்டேஷனில் புகார் செய்து FIR போட்ட உடனே ஆக்க்ஷன் எடுப்போம்" என்றார்.

சரி, உங்களுக்கு மாதம் 'இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும்' என்று  இருக்கிறதா?

அது , ஆமாம் , இருக்கிறது. 'சந்தேக கேசில் எவனையாவது பிடித்து உள்ளே தள்ள வேண்டியதுதான்.

அது எப்படி செய்வீர்கள்?

"ரோந்து வரும் பொது அவன் பூட்டிய வீட்டின் வாசலில் பூட்டை உடைக்கும் தளவாடங்களோடு பதுங்கியிருந்தான். எங்களை (போலிசை)பார்த்த உடன்  ஓட முயற்சிக்கும் போது  பிடித்தோம் என்று கேஸ்  போட  வேண்டியதுதான் ."

சரி, எல்லாரும் உள்ளூர்காரங்களகதானே இருப்பார்கள்? எப்படி கேஸ் போடுவீர்கள்?

"ஊருக்கு புதிசாக எவனையாவது தள்ள வேண்டியதுதான்!"

" அது உங்களுக்கு எப்படி தெரியும்?

" அது ஒண்ணும் பிரச்னை இல்ல சார்- இந்த பஸ்ல டிக்கட் கிடைக்காம சில பேர் லாரியில் போவானுங்க... அவனை பிடித்து கேஸ் போட்டுற வேண்டியதுதான்.

" பாவம். என்ன urgent  வேலையோ போகிறான்- அவனை பிடித்து கேஸ் போடுகிறேன் என்கிறீர்களே?

" இதெல்லாம் பாத்தா  ஆகுமா  சார்?" என்றார்.

அவ்வளவுதானா- வேறு ஏதாவது கேஸ் உண்டா ?

."கஞ்ஜா வைத்திருந்தான் என்று கூட சமயத்தில் போடுடரதுதான் "

" கஞ்சாவுக்கு எங்கே போவீர்கள்?

பொட்டலம் எங்கிட்டேயே இருக்குமில்ல? என்று காவி பல்லை பெருமையோடு காட்டினார்,

சார், நான் கிளம்பறேன்- ஸ்டேஷனில்' accused  suspect' ஐ விசாரிக்க வேண்டி இருக்கிறது. என்றார்.

" எப்படி விஜாரிபீர்கள்? என்றேன் நான்.

மயில் இறகு போடுமா சார்? நக கணுவில் ஊசி ஏற்றி விசாரிப்போம் என்றார்.

இவர்கள் விசாரணை முறையில் மகாத்மா கூட திருடினேன் என்று ஒத்துக்கொண்டு விடுவார்!

காவல் துறை இந்த லட்சணத்தில் வேலை செய்தால் ஊர் எங்கிருந்து உருப்படும் என்று எண்ணினேன்.  

"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதியார் யாரைப் பற்றி பாடினார்?என்ற என் சந்தேகம் இன்று வரை தீர வில்லை.

IN THE NAME OF GOD!


வாழ்கையில் புகழோடு இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தாம் உயர்ந்தவர் அல்லது வேறுபட்டவர் என்று காண்பிக்க வேண்டுமென்ற அவாவில் செய்யும் அறிவற்ற செய்கைகளை பகுத்தறிவு என்ற பெயரில் செய்கிறார்கள். முதலில் பகுத்தறியும் தகுதி நம்மிடம் உள்ளதா? நம் அறிவு- வரை முறைக்கு உட்பட்டது. அதை தாண்டிய விஷயங்களை நம் அறிவால் பகுத்தறிய முடியாது. இதுதான் உண்மை. அரை அடி அளப்பானால் உலகை அளக்க முடியுமா? முடியும் என்று சொன்னால் அதன் சாத்தியகூறுகள் எவ்வளவு என்பதை முதலில் " பகுத்தறிவால்" உணர வேண்டும். நாம் சொல்வதை நம்பி நம்மை தலைவன் என்று தொடர ஒரு கூட்டத்தை உருவாக்கி நம் மூட நம்பிக்கைக்கு பகுத்தறிவு என்று பெயர் வைக்க கூடாது. முதலில் அனைத்தையும் அறியும் சக்தி நம்மிடம் இல்லை. நம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் 'புதையல் தேடல்' முறைதான். முதலில் எல்லாவற்றுக்கும் விடையும் முடிவும் காண வேண்டும் என்ற எண்ணமே தவறு. இதை விட கொடுமை இதை முதலில் பரப்பியவர்களின் நோக்கம். ஆரம்பத்தில் தனக்கென்று  ஒரு கூட்டமும்  அதற்கு ஒரு கொள்கையும்  வேண்டும். கூட்டத்துக்கு ஒரு இலக்கும் தன்னை தலைவனாக கொள்ளும் மனமும் வேண்டும்.  கூட்டம் உருவான பின் அவர்களின் பொது இலக்கு ' கடவுள் எதிர்ப்பு'. எப்படியும் கடவுள் மறுப்பு செய்தி வெளியிட  மாட்டார்  இதுதான்   பகுத்தறிவு.!

சரி, உருவற்ற ஒன்றிடம் எப்படி போராடுவது? ஆகவே அதன் அடையாள குறியாக கிடைத்தவர்கள் பார்பனர்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு  அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்தானா ? ' எல்லோரிடமும் இருக்கிறது. இது சரியா தவறா? இந்த எண்ணம் மானிட இயல்பு!!

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை.

இதன் தொடராக நாம்
" அதனினும் அரிது உயர் ஜாதியில் பிறத்தல் ; அனைத்தினும் அரிது "நானாய் பிறத்தல்'
எனும் தன்னுயர்வு கொண்டு திரிகிறோம். ஜாதியில் உயரவில்லை என்றால் படிப்பில் உயர்வு  அது இல்லாவிட்டால் பணத்தினில் உயர்வு, அதுவும் இல்லாவிட்டால் அழகினில் உயர்வு. எதுவும் இல்லை என்றால்  ".ஏரியா வுட்டு ஏரியா " . ஏதோ ஒரு விதத்தில் நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து உயர் உணர்வு கொள்வதில் நமக்கு மகிழ்ச்சி.

இந்த உணர்வை உபயோகித்து பார்பனர்  , பார்பனரல்லாதோர் என்று மக்களை  இரு விதமாக பிரித்து  கொள்கைக்கு கடவுள் எதிர்ப்பை முன் வைத்து , கடவுள் பிரதிநிதிகளாக பார்பனர்களும் அவர்களை எதிர்த்தல் பகுத்தறிவு கொள்கைக்கு இயைந்ததாகவும் ஏற்படுத்தினர் நம் 'தலைவர்கள்.. உண்மையில் அவர்கள் நோக்கம் அதுதான? வாழ்கையில் நம் தலைவர்கள்  நோக்கம் வசதி பணம் புகழ் , பல தலை முறைகளுக்கு சொத்து!!  நம் தலைவர்கள் நமக்கு செய்த நன்மைகள் அல்லது தீமைகள் அனைத்தையும்  இப்போதுள்ள தலைமுறை பெருமளவு  உணர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் கொள்கை வழி நடக்கிறார்களா? இல்லை  - தனக்கென்று தனி கொள்கை வைத்திருக்கிறார்கள்! " ஊருக்கு உபதேசமடி பெண்ணே உனக்கிலை! " என்னும் கதை இவர்களுக்குகாகத்தான்.

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு ; அச்சம் என்பது மடமையடா " என்பது ஊருக்கு உபதேசம்!  தனககென்றபோது " ஐயோ கொல்றாங்களே" !!"

இந்த தலைவர்களுக்கு உங்களிடம் வேண்டியது உங்கள் ஓட்டு மட்டும்தான். அதன் பின் செய்யவேண்டியது எல்லாம் 'பகுத்தறிவு வாதிகள்' வேலை. ' நீங்க பாத்துண்டு மட்டும் இருங்க" !

நம் நேரத்தை இவர்களுக்காக செலவு செய்ய வேண்டாம். நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் முன்னேற்ற பாதையிலே பயணம்.
இவர்கள் நம் முதுகு சுமைகள். இவர்கள் பேச்சை கேட்டுகொண்டிருந்தால் நாம் " தமிழ் நாட்டு தவளைகளாக " இருக்க வேண்டியதுதான். "குண்டு சட்டியில் அவர்களுக்கு நாம் குதிரை ஓட்ட வேண்டாம்."

கடவுள் என்னும் உருவற்ற சக்தியை உணர பகுத்தறிவு ஒரு தடைக்கல்!! அந்த உணர்வு நமக்கு வரும் போது  வரட்டும். நாம் அதை அப்போது தெரிந்து கொள்வோம்.

" கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர்!"

வெள்ளி, 27 ஜூலை, 2012

TAMIZHAR PANBAADU

முடிச்சூர் ரோடு பிரிட்ஜ் அடியில் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு  வேலை வெட்டி எதுவும் கிடையாது. ஆனால் மீதி ஜனங்களுக்கு அப்படி இல்லை. எல்லோரும் பிஸி ஆகத்தான் இருந்தார்கள். காலை 6 மணிக்கே களை கட்டி இருந்தது . அதுதான் நம்மூரின் சிறப்பியல்பு. நாலு பக்கமும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். பூரா சேறும் மண்ணும். போதாததற்கு மழை காரணமாக சாக்கடை நிரம்பி வழிந்து ரோடு எல்லாம் கருப்பு சேறு . ஜனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் கூட கிடையாது. 'what cannot be avoided has to be endured ' என்ற விரக்தி சித்தாந்தத்தில் , அப்படி இருக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அனைவரும் வேகமாக போய் கொண்டிருந்தார்கள். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு போர்டு - 'கன ரக லாரிகள் காலை 8 மணிக்கு மேல் இந்த வழிக்குள் வரக்கூடாது ' என்று. ஆனால் ஒரு போலீஸ் கான்ஸ்டபில் 6 மணிக்கெல்லாம் அங்கு ஆஜர் ஆகி இருந்தார். லாரிகள் அனைத்தும்  அவரை தாண்டி நிறுத்தி, தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டி சென்றனர்.


(மேலே இருக்கும் படங்கள் நான் சொன்ன இடத்தில எடுத்ததில்லை- ஒரு பானை சோற்றுக்கு என்னும் விளக்கத்தில் பாருங்கள்)
பிரிட்ஜ் கீழே இருந்த சுவர் பூரா போஸ்டர்கள் !. 'வீரன் ஆறுமுகத்துக்கு கண்ணீர் அஞ்சலி- நண்பர்கள் ( அவர்கள் பெயர் அனைத்தும் இனிஷியலுடன்); படப்பை அருகே மலிவு விலையில் மனை- " டாக்டர் அய்யா அழைக்கிறார்"                        ( இலங்கையில் தமிழர் கொடுமைக்கு காரணமான 'ராஜபக்சே வை எதிர்த்து (அல்லது -,லோக்கல் பிரச்னைகளில் யாரை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்று இன்னும் முடிவாகாததால்) ; 'தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்- "கௌன்சிலர் எலெக்க்ஷனில் வெற்றி பெற வாய்ப்பு கொடுத்த 'அம்மாவுக்கு நன்றி-நன்றி நன்றி-; -டாக்டர் விஜயகாந்த் அழைக்கிறார்- டாக்டர் கலைஞர் அழைக்கிறார்- கடல் அலையெனத் திரண்டு வாரீர்- தமிழ் இன மான தலைவர் தொல் திருமாவளவன் அழைக்கிறார்- பக்கத்தில் ஒரு சீறும் சிறுத்தை -' 'வருங்கால பிரதமரே என நேஹ்ருவின் நேர் வாரிசு ராகுல் காந்தி படம்-( பின்னால் மூன்று நான்கு வட்டகளில் - இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி படங்கள் ) முடிவே இல்லை!

இவர்கள் நமக்கு நிஜமாகவே என்ன செய்கிறார்கள்? அவர்கள் யாரும் நம்முடன் இல்லை எனபதை இவர்கள் எங்கிருந்தோ நம்மை அழைப்பதிலிருந்தே  தெரிகிறது. அது  இருக்கட்டும். அது என்ன 'கடல் அலை போல' திரண்டு வருவது? என்றோ ஒரு நாள் 'சுனாமி' போல் திரண்டு வந்து இந்த சுவரொட்டி அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தோன்றியது. அப்போது சைக்கிளில் சுவரோட்டிகளோடு ஒரு வாளி நிறைய பசையோடு ஒருவர் வந்து  இறங்கினார். ஒரே போஸ்டரின் காப்பிகளை  அந்த பிரிட்ஜ் சுவர் பூரா ஒட்டினார் . ஏற்கனவே இருந்த சுவரொட்டிகள் மேலே.! ஒரே போஸ்டரை  ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றாக ஒட்டுவதில் என்ன அர்த்தம்? பத்தோடு பதினொன்று- அத்தோடு இது  ஒன்று என போக கூடாது- ஜனங்களுக்கு வேறு வழியில்லாமல் இந்த போஸ்டரை தான் பார்த்து உணர வேண்டும் - என இருக்கலாம்

இவை அனைத்தையும் என்னை தவிர யாரும் பார்த்து கொண்டிருக்க வில்லை. கையில் பையுடன், அல்லது TVS பைக் பின்னால் அவர்கள் ஸ்கூல் குழந்தைகளுடனும், அவரவர்கள் வேலையே கண்ணாக போய் கொண்டிருந்தனர்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். ஒரு சின்ன கோயில் - மக்கள் நிறையவே இருந்தார்கள். ஒரு ரோடு கடை- இட்லி தோசை கடை- கடைக்காரம்மா முதல் ஈட்டில் எடுத்த இட்லிகளை காக்காய்க்கு கூரை மேல் வைத்தார்கள். நம்மூர் நம்மூர்தான்- எவ்வளவு வேண்டுமானாலும் கத்து." சொரணை கெட்ட தமிழன் ", "சோற்றால் அடித்த பிண்டம் "  "வாழை மட்டை"  இன்னும் மனதில் என்னென்னமோ கற்ற உன்  தூய தமிழில் 'துப்பு'!     ஆனால் நம் ஜனங்கள் மாற மாட்டார்கள்-நல்லவர்கள்-கோவில் போவார்கள்- மசூதி செல்வார்கள்- சர்ச் போவார்கள்.இரக்க உணர்சியோடுதான் இருப்பார்கள்.  தப்பு தவறு அங்கங்கே நடந்தாலும் உதவிக்கு நிச்சயமாக வருவார்கள்.(போலீஸ் தொந்தரவு இல்லாமல் இருந்தால்). 'தமிழர் யார் என்று நீங்கள் நிச்சயிக்க வேண்டாம். ராஜ ராஜ சோழன் விழா- எப்போது பிறந்தான்? தெரியாது - உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டன்  பெயர் என்ன? என்னவாக இருந்தார்? சத்தியமாக தெரியாது.'சுத்தமான தமிழை இன்னும் பேசும் சேர நாட்டவர் தமிழரா அல்லரா?
சொல்ல மாட்டீர்கள்... திராவிட நாட்டின் எல்லைகள் என்ன ? அது  குழப்பமான விஷயம் . தமிழ் பேசிய பாரதியாரை-ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பெரியவரை  தமிழரல்ல என்பீர்கள்! ராமன் ஆரியன் என்று புராணத்தில் படித்து விட்டு ராவணன் திராவிடன் என்பீர்கள்.ராமன் 'சோம ரசம் குடித்தாரா  அல்லது பூண்டு ரசம் குடித்தாரா என்னும் விவரத்தில் உங்கள் புலமையை காட்டுவீர்கள். ராவண லீலா கொண்டாடுவீர்கள். இராவணன் சிங்கள நாட்டினன்.. . அப்போது அங்கு இருக்கும் சிங்களவர் அனைவரும் திராவிடரா?"தொப்புள் கொடி உறவு " என்று பந்தம் கொண்டாடும் நீங்கள் அவர்கள் அவலத்தில் அரசியல் செய்வது உலகறிந்த உண்மை - அவர்களுக்கும்  நன்றாக தெரியும்... சொந்த வரலாறையே சுத்தமாக அறியாத   நீங்கள்' வந்தவர் 'வரலாற்றை பற்றி வாய் கிழிய பேச வந்து விடுவீர்கள்.  . தன்மான இனம் பிரித்து தமிழர் அடையாளம் காட்ட  தயங்காமல் வந்து  விடுவீர்கள்.

நம் ஜனங்கள் நல்லவர்கள். அவர்கள் கவலைகளையும்  கஷ்டங்களையும் நீங்கள் என்ன அறிவீர்கள்? அவர்கள் மலர் கிரீடம் தரித்திருக்கும் மன்னர்கள் இல்லை. 'கும்பி எரியுது குடல் கருகுது - உனக்கு "குளு குளு " கார்  ஒரு கேடா? என்று ஆட்சியில் இருந்தவரை விமரிசனம் செய்த  நீங்கள் '" பக்தவச்சலம் அண்ணாச்சி - பருப்பு விலை என்னாச்சி என்று பரிகசித்த நீங்கள்,  உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? 'பக்தவச்சலம் குரங்கே- பதவியை விட்டு இறங்கேன் ! என்று போஸ்டர் ஒட்டியவர்கள் நீங்கள். இதுதான் தமிழர் பண்பாடா? " பெரும் தலைவர்- வாழ்நாள் பூரா வாடகை வீட்டில் இருந்தவரை- " காமராஜர் முதுகு  தோலை  உரித்தால் இரண்டு டமாரம் பண்ணலாம் என்று விமரிசதவர் நீங்கள். " இதுதான் நம் பண்டைய கலாசார பண்பா?அடுத்தவரை குறை கூறினால் நீங்கள் உயர்ந்தவர் என்று அர்த்தம் கிடையாது.  நம் மக்களை நீங்கள்  தொந்தரவு செய்யாமல் விட்டாலே தமிழ் நாடு நிச்சயம்  முன்னே வரும். 'சிந்துபாத் மீது சவாரி செய்த கிழவன் போல் அவர்கள் முதுகில் நீங்கள் சவாரி செய்யாமல் இருந்தாலே  அவர்கள் எதிர் காலம் நன்றாக இருக்கும். கால் பிடித்து இழுக்கும் சுயநல தவளைகளாக நீங்கள் இருப்பதால்தான் அவர்கள் முன்னேற்றம்  தடை படுகிறது..

அவர்களை வாழ விடுங்கள்; .

KURANGU BASKAR !!

குரங்கு பாஸ்கர் HDFC  பேங்க்  அருகில் (ஒரு மரத்தடியில்) நின்று கொண்டிருந்தான். ஏதோ பாங்கில் அக்கௌண்டில் பணம் போடவோ எடுக்கவோ நின்றிருந்தான் என எண்ணாதீர்கள் . தன்னுடைய 'இரை 'க்காக காத்திருந்தான். அவன் குறி எப்போதும் தப்பியதே இலலை . குரங்கு என்று அவனுக்கு காரணப்பெயர் போலீஸ் காரர்கள் அன்புடன் வைத்திருந்தனர். கையில் வைத்திருக்கும் பணப்பையை குரங்கின் லாவகத்துடனும் வேகத்துடனும் பிடுங்கிக்கொண்டு ஓடினானாகில் அவனை பிடிக்க இன்னொரு குரங்குதான் வர வேண்டும். பறி கொடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் முன்னே குரங்கு பாஸ்கர் மறைந்து விடுவான். அவனுக்கும் போதாத காலங்களில் மாட்டிகொண்ட போது தர்ம அடி வாங்கிக்கொண்டு போலிசிடம் பிடி பட்டிருக்கிறான். அவனுக்கும் இப்போது வயசாகிறது. ஒரு தடவை போலீஸ் கேஸ் ஆகி ஜெயிலுக்கு போய் விட்டால் மறுபடியும் போவதற்கு தப்பு செய்ய வேண்டும் என்ற அவசியமே நம்மூரில் இல்லை. தீராத திருட்டு கேஸ்களை இவனை மாதிரி ஆஸ்தான கேடிகள் மீது சுமத்தி போலீஸ் அவ்வப்போது இவனை ஜெயில் விருந்தாளி ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் குரங்கு பாஸ்கர் பயப்படுவதே இல்லை. அவனே சமயத்தில் அவர்களை தன மேல் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளும்படி கேட்டு கொள்வான். அதற்கு அவனுக்கு காசு கூட கிடைக்கும்!    அப்புறம் 'போலீசுக்குஆதரவாக ' பொய் சாட்சி சொல்லி காசு பண்ணுவான்.'தொழில்  ரகசியங்களையும் ஜெயிலில் சக கேடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். ஜெயில் பல சமயங்களில் 'vocational training college 'ஆகத்தானே நடக்கிறது? அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் அவர்கள் வெளியே வரும்போது இரண்டு விரல்களை உயர்த்தி 'V '( எனக்கு 'வெட்கம் இல்லை என்பதின் அடையாளமாக!) காண்பித்து ' தொண்டர்களுடன் ' செல்வார்கள். பாவம், குரங்கு பாஸ்கருக்கு அந்த  மாதிரியெல்லாம் அந்தஸ்தும் இல்லை- ஆட்களும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை.சரி, நம் கதைக்கு விட்ட இடத்திலே வருவோம்.


பணத்தை பறி கொடுக்கவென்றே சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பாங்கிலிருந்து பணத்தை 'மஞ்சள் பையில் 'தான் வைத்து எடுத்து செல்வார்கள்.ஏன் என்று கேட்காதீர்கள். தமிழர் பண்பாடோ என்னமோ தெரியாது. நம் குரங்கின் குறியெல்லாம் அவர்கள்தான். இவனுக்கேன்றே பணம் 'withdraw ' செய்து இவனிடம் கொடுக்க வந்தாற்போல் நடந்து கொள்வார்கள் . சரியான் 'வசூல்' நாட்களில் குரங்கு பாஸ்கர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு  'தொழில்' செய்ய வேண்டிய வேலையே இருக்காது. அந்த நாட்களிலெல்லாம் 'வோட்காவ'  ஊத்திகினு ஓடியாடி' பாடுவான் . 


இன்று 'புதன்' கிழமை. குரங்கு பாஸ்கருக்கும் இன்றுதான் நல்ல நாள். மாதத்தின் முதல் வார புதன் கிழமை விசேஷமான நல்ல நாள். 'மஞ்சள் மகிமைக்காக' காத்திருந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை. ஒரு வயதானவர் 'மஞ்சள் பையுடன்' பாங்கிலிருந்து வெளிப்பட்டார். அவர் வெளியே வந்து தன் தோளில் போட்டிருந்த துண்டால் முகம் துடைக்க முற்படுகையில் 'மஞ்சள் பை' கை மாற குரங்கு பக்கத்து சந்து வழியாக ஓடி மறைந்தான். 'பை' கொஞ்சம் கனமாக இருந்தது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ் ஏறி மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு டிக்கெட் வாங்கினான். 'அப்பாடி ' இன்று நல்ல வேட்டைதான். ஆண்டவன் புண்ணியத்தில் மகத்தான மகசூல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.


மெதுவாக பையினுள் கையை விட்டு நுழைத்து பார்த்ததில் மூன்று கட்டு கரென்சி இருந்ததை உணர்ந்தான். 'எவ்வளோ காசு, பேசாம ஒரு கடை வைத்து விடலாம்' - அப்படியே படிப் படியாக முன்னேறி அரசியல்' செய்து' ஒரு நல்ல 'பொசிஷன் ' வந்து  விட்டால்  பின்னர் குரங்கு அடை மொழியை விடுத்து , 'டாக்டர பாஸ்கர் ' என தொண்டர்களை விட்டு கூப்பிட சொல்லலாம். " டாக்டர் அழைக்கிறார் - அலை கடலென திரண்டு வாரீர்! என்று போஸ்டர் ஒட்டும் நாளை எண்ணி கனவு  கொண்டிருக்கும்போது  மெயின் பஸ் ஸ்டான்ட் வந்து  விட்டது. கனவுகளோடு இறங்கிய குரங்கு பாஸ்கருக்கு போதாத காலம் போலீஸ் உருவில் கீழே காத்திருந்தது . " இதோ பாரு 307, கும்பிடப்போன  குரங்கு குறுக்கே வந்திருக்கு பார் - வாடா , உன்னை எங்கெல்லாம் தேடுறது , வா போலாம்' என்றார் 347. 'சார், நான் வீடு வரைக்கும் போய் விட்டு வருகிறேன்- அர்ஜென்ட் வேலை இருக்கிறது- என்று நழுவப்பார்த்த கு.பாஸ்கரை அவர்கள் விடுவதாயில்லை. 'அதெல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம்- கோர்ட்டுக்கு இப்போது போக வேண்டும்- ஒரு முக்கியமான கேசில் நீ நம்ம லோக்கல் தலைவருக்கு (தாதா) பதிலாக உள்ளே போக வேண்டும்- அவருக்கு கவுன்சிலர் எலெக்சன் வேலை இருக்கிறதாம்! என்றார் 307. போச்சுடா சாமி எல்லாம் என்று தன 'ஜாதகத்தை' நொந்து கொண்டு கு.பாஸ்கர் போலீஸ்காரர்கள் பின் சென்றான். 10 நிமிஷ வேக நடைக்கு பின் மூவரும்  போலீஸ் ஸ்டேஷன் சென்றடைந்தனர் .


'என்ன கிடைச்சுட்டானா - வாடா குரங்கு, உன்னையெல்லாம் போய் தேடி பிடிக்க வேண்டியதாகி விட்டது பார்-' என்று வரவேற்றார்- ரைட்டர். "சட்டை பான்ட் எல்லாம் கயட்டி வைத்துவிட்டு உள்ளே போ- அது என்ன பையில் ?-பாரு 307?  சார் ரைட்டர் சார், இவன் பையில் 3 கட்டு 500ரூ இருக்கிறது சார்- எங்கோ அடித்திருக்கிறான்- என்றார் 307-"  " அடி வயிற்றில் ஒரே சமயத்தில் ஐஸையும் நெருப்பையும் ஒன்றாக உணர்ந்தான். குரங்கு பாஸ்கர். -" சரி சரி நல்லதா போச்சு - காசையும்  கொடுத்து கேசையும்  ஒத்துகிட்டு-  பார் உள்ளே போறான் பார் - என் நண்பேன் 'என்று தொடை தட்டி  சிரித்தார் ரைட்டர் .


" பிச்சை எடுத்தாராம் பெருமாள் - அதை புடுங்கிண்டாராம் இந்த அனுமார்"!! என்று சொல்லி ஆரவாரமாக சிரித்தார் 307. அதை வழி மொழிந்து  பின்சிரிப்பு செய்தார் 347. 


பெருமாள் யார் இதில் அனுமார் யார் என்று புரியாத  குரங்குக்கு தாங்க முடியவில்லை . " அந்த பழமொழி சொன்ன காலத்தில் போலீஸ் இல்லை  " என்றான். " என்னடா முனகல் ? இன்ஸ்பெக்டர் வரார் இப்போது- கோர்டுக்கு நேரமாச்சு " போடா  உள்ள "  'என்று அவனை நெட்டி உள்ளே தள்ளினார் 347.  



வியாழன், 26 ஜூலை, 2012

SEA IS FULL OF FISH !!

"கிட்டாதாயின் வெட்டென மற "  என்கிறது நமது தமிழ் பழ மொழி.
" If You love something , set  it free , if it comes back ,its yours , if not, it was never yours from the beginning " என்கிறார்  Rachel Thompson .


என் விஷயத்தில் இந்த அறிவுரையின் தேவை எதுவுமில்லாமலே நான் இருந்தேன்.என் இள வயதில்  நான் காதலித்த பெண்ணை  என் ப்ரெண்டும் காதலித்தான் .  என்னிடமே அவளை எப்படி 'பட்டாய்கலாம் ' என அட்வைஸ் வேறே கேட்பான். என் மற்ற பிரெண்ட்ஸ் என்னிடம் " உனக்கு மூளை இருக்கிறதா ? அவனை ரெண்டு போடாமல் அவனுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறாயே " என்பார்கள். என் பதில் ஒன்றுதான் . " எனக்கு இருக்கும் உரிமை அவள் கல்யாணம் ஆகும் வரை அவனுக்கும் உண்டு. அவளுக்கு என்னிடம்  விருப்பம் இருந்தால் அவன் என்ன செய்ய முடியும். அப்படி அவளுக்கு அவனிடம் அல்லது வேறு யாரிடமோ விருப்பம் ஏற்பட்டால் அது இப்போதே நடக்கட்டும். " என்பேன்.

எங்கள் அலுவலகத்தில் எங்கள் சீனியர் கிளேர்க் இருந்தார்.  . இவன்; அவரிடம் சென்று தனக்கு உதவி செய்ய கேட்டான். விவரம் தெரியாத அவரும் அவள் இருந்த ஆபீஸ் வரை சென்று விட்டு ( ஒன்றும் கேட்காமலேயே) வந்தார். இவனுக்கு ஒரே ஆர்வம். " என்ன சொன்னாள் சார் ?" என்று ஆவலுடன் கேட்டான். " முதலில் கையை கொடு, என்று குலுக்கி விட்டு , " உன்னை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் , ஆனால்  நீ சிகரெட் பிடிப்பதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை" என்றார். எனக்கு ஒரே ஷாக்; இருந்தாலும் மேலே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. சரி, இதை இப்போதே செலேப்ரெட் செய்ய வேண்டும் என்றான் . நான் அவள் இருந்த ஆபீஸ் சென்று அவளிடம் இதை கேட்ட போது அவளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. " இந்த கூத்தை நீங்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்தீர்கள; உங்களுக்கே என் மேல் அன்பு இல்லை  என்று என்மேல்  எரிந்து விழுந்தாள் .

பெண்களுக்கே உரித்தான் அர்த்தமில்லாத சந்தேகத்தில் அவள் என்னிடமிருந்து பின்னர் விலகினாள் . நான் ஒரு காதலியிடம் காட்ட வேண்டிய அளவு அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை என அவள் எண்ணி இருக்கலாம்.  ஆனால் பெரும்பாலான பெண்கள் புகழ்ச்சி வார்த்தைகளுக்குத்தான் நம்பிக்கை வைப்பார்கள் என எனக்கு அப்போது தெரியாது. இப்போதும் புரியவில்லை.தெரிந்திருந்தாலும்  என் இயறகையான குணம் யார் பின்னாலும் போவதல்ல . போகட்டும், நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு வருடம் கழித்து அவள் என் பிரெண்டையே கல்யாணம் செய்தாள் . முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . பின்னர் இதனால் ஏற்பட்ட வலியை மறந்து விட்டேன். இதை படிப்பவர்கள் என்னை பற்றி என்ன எண்ணுவார்கள் என்பதையும் இப்போது நான் யோசிக்கவில்லை . நான் சொல்ல வந்தது எப்படி காதலிக்க வேண்டும் என்பதல்ல. நம்மை ஒருவர் ஒதுக்கி வேண்டாம் என்பதை கூட சொல்ல தேவை இல்லை ; போடா போடா புண்ணாக்கு என்று நடத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.


தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற் பயிற்சி செய்ய செல்வேன். அதை காலை 4 மணிக்கு மாற்றினேன். வேலை இடம் மாறுதல் செய்தேன். எனக்கு பிடித்தமான விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினேன். அவளை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் ஆக்கி கொண்டேன். விரைவில் அந்த உறவின் வலியை மறந்தேன் . 


கடவுள் ஒருவரை தவிர்த்து யாரும் நம்மிடம் 100% அன்பு காண்பிக்க மாட்டார்கள் ; நாம் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையும் அன்பும் வைத்து ஏன் அடி வாங்க வேண்டும். ஒரு முறை என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது , என் நண்பன் அவன் காலேஜ் ப்ரொபசர் " பிள்ளைங்களை  நம்பாதீங்கடா - விளக்கு காட்டி கூட்டிகிட்டு   போய்  குளியில் ( குழியில் ) தள்ளிடுவாங்க " என்றார் என்று சொல்லி சிரித்தான் . கூட இருந்த பெண் நண்பி " தள்ளுவதோடு நிறுத்தமாட்டோம்  " அவள் பாவம் அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்- நான்தான் குழியில் குதித்தேன் " என்று சொல்ல வைப்போம்"  என்றாள்!! 


உண்மையில் நம் மேல் உண்மையான  அன்பு இல்லாதவர்கள் , ( ஆண்/பெண்)  நம் வலியில் அவர்களின் வலிமையைதான் உணர்வார்கள். அவர்கள் மகிழ்ச்சிக்கு நாம் தீனி போடுவது தேவை இல்லாத வேலை. ' என் வழி தனீ வழி " என்று செயல் முறையில் காண்பிப்பது அவசியம். நம்மையே யாருக்கும் படையல் ஆக்க வேண்டிய தேவை இல்லை. 'சமுத்ரம் முழுக்க மீன்கள்! 


புரிந்ததா? 

NIGERIAN NEWS!!

ஐந்து  பேர் சேர்ந்தார்கள் என்றால் அனைத்தையும் ஒழித்து விடுவார்கள் என்று  மகாபாரதத்தில் தெரிந்து கொண்டோம். தமிழ் படங்களில் ஐந்து விரல்களையும் ஒன்றொன்றாக சத்தம் வருமாறு மடித்து ஹீரோ குத்தும் போது அதன் சக்தியை உணர்கிறோம். ஐந்தாம் படை, ஐந்தில் வளையாதது ,என ஐந்தின் அளவற்ற சக்தியை பயத்துடன் தெரிந்து உணர்கிறோம். சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறீர்களா ? சொல்கிறேன்.

இன்று காலை," Times of India " வில் ஓர் செய்தி.  ஐந்து மனைவிகள் சேர்ந்து தங்கள் கணவனை கற்பழித்து கொன்றார்களாம் . காரணம் அவன் தன் ஆறாம் காதலிக்கு அதிகமான் அன்பும் அக்கறையும் காண்பிததுதான் . அவன் ஆறாம் மனைவியோடு இருந்த போது மீதி ஐந்து பேரும் கத்தி கபடா உடன்  களமிறங்கி தங்களையும் ' திருப்தி ' செய்ய வேண்டும் என்று அவனை மிரட்டி பணிய வைத்தார்களாம் !  இதன் விளைவு அவன் ஐந்தாம் மனைவியின் 'முறை ' வந்த போது அவன் உயிர் போய் விட்டது! அவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். அடுத்த நாள் அவர்களில் இரண்டு மனைவியரை போலீஸ் கைது செய்தனர் என்று  NIGERIA வின் Daily Post தெரிவிக்கிறது.

ஆபரேஷன்  சக்செஸ்  பேஷண்ட் collapsed என்னும் பழமொழியை அவன் ஐந்து மனைவியரும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

இதே நாளிதழில் அடுத்த பக்க செய்தி Nigeria நயவஞ்சகன் ஓர் பெண்ணை ஏமாற்றி 22 லட்சம் சுருட்டிய விஷயம். செவ்ரோன் ஆயில் கம்பெனி UK விடமிருந்து அந்த பெண்ணிற்கு 85000pounds prize என்று SMS அனுப்பி 22 லட்சம் பரிசு பணத்தை மாற்றுவதற்காக சொன்னதின் பேரில் அந்த பெண்ணும் 22 லட்சம் ரூ கட்டியிருக்கிறார்கள். வந்து சேர்ந்தது என்னமோ ஒரு டெபிட் கார்டு மட்டும்தான். அதன் மூலம் பணம் கிடைக்காத அந்த பெண் கேட்டதிற்கு அவர்களை இன்னும் ஒரு 1.5 லட்சம் செயல் தடங்கல்  ஒன்றை சரி செய்வதற்கு கேட்டிருக்கிறான். சந்தேகம் வந்த அந்த பெண் போலீசிடம்  புகார் செய்ய, பிடி பட்டான் அவன். எனக்கு இந்த மாதிரி நிறையவே ஈ-மெயில் வந்திருக்கின்றன. வாரிசு இல்லாத ஆப்ரிக்கா ராஜா ஒருவர் 25 மில்லியன் dollor  விட்டு சென்றதாகவும் அதை நான் பெற்றுக்கொண்டு அவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் ஈ-மெயில். இதற்கு பதில் அளித்தால் உடனே அந்த பணத்தை மாற்ற நான் 5 லட்சம் அனுப்ப வேண்டும் என பதில் வரும். ஏமாந்தவர்கள் எத்தனையோ. முடிவே இல்லை. இன்னும் நடக்கிறது. என் மகனுக்கு கனடாவில் 8200 $ மாத சம்பளத்தில் ஒரு on -line interview நடத்தி உடனே வேலை உத்திரவும் வந்து விட்டது. விசா வாங்க வேண்டுமென்றால் Rs 34000/- அவர்கள் சொல்லும் அக்கௌன்டிற்கு அனுப்ப வேண்டும் என எ-மெயில். சரி, அக்கௌன்ட் நம்பரும் பெயரும் கேட்டால் , ஒரு nigeriian  பெயரும் Union Bank அக்கௌன்ட் நம்பரும். எத்தனை பேர் அனுப்பி இருப்பார்களோ !!

வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அனைவரும் இந்தியர்களை , முக்கியமாக தென் இந்தியர்களைத்தான். நம்பி இந்த மோசடியை நடத்துகிறார்கள். போதாததற்கு Drug smuggling வேறே. Nigerians அனைவரும் இப்படிதானா ? தெரியவில்லை.

ஒன்று நிச்சயமாக புரிகிறது. இந்த விஷயம் மட்டும் இல்லை. நம் மனது ஆசையின் வசம் சிக்கும் போது அறிவின் செயல் திறனிழந்து விடுகிறது. எல்லா விஷயங்களிலும் 10% சந்தேகம் எப்போதும் வைத்திருந்தால் ஒருக்கால் இந்த குழிகளிலிருந்து தப்பலாம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

PLEASURES OF LIFE


What is your routine in the morning when you get up from bed ? you brush your teeth, have a steaming cup of filtered coffee and look sideways whether the news paper has been delivered, and if so, whether it is not ruffled up. Pleasure of reading is lost, if some one else had read the news paper before you, right ?
Read the newspaper according to your taste and attitude in life which set the priorities for reading pleasure. Then what ? You are probably getting late for your 'office'. Take a quick bath, munch a hurried breakfast and rush to your office blending in the mad rush of traffic.
Reached your office right ? ( Identify all those staff who do not greet you and make a mental note of that. ) Get into your cabin and after a mindless prayer to no useful purpose, switch on your computer to check your e-mails !
Expected ! One more day to wage a war on e-mail accusations on your lack of skill in running the office and your hot headed replies to squelch the stupid accusations and end up with a sense of anger and of course, increasing blood pressure. Every one tries to project himself to prominence and what other better way could it be than blaming others for their lapses. Build a pyramid of files on them , brick by brick and bury their growth aspirations ! After all, in the rat race ( No offence to rats ) to reach your status and prominence, you need to do all these !
The remaining day is spent in attending / conducting meetings, where the only purpose is to make others understand your point of view and accept you as the team leader. You look forward to dictating the minutes of meeting with the sole purpose of projecting your visions. Copy them all to top management and relax ; 80 % of the day's work is now over. Now is the time for small talk, with your 'team' of confiding colleagues to conspire, on possible chances to upgrade your position.
The day in office is over ! It is time to get back home, have a wash, down two pegs of your favourite whiskey, gulp your dinner and dump yourself to your bed !
What an wonderful life ! Can you differentiate one day from the other, while the agenda is the same and the attitude and activities are same ! All you need in life is recognition with the highest possible status and a sound financial back-up. Everything else in life is secondary !
Come on, I shall show you something else in life. Get up and come with me, holding my hand, for a silent morning walk in the glades after a fresh early morning rain. Smell the freshness of green rain forest. Listen to the chirping of small birds perching on the branches of the tall and gigantic trees. Enjoy the rustle of leaves, spray of hanging droplets of rainwater on your face with the breeze welcoming you into this forest, the eerie music from the bamboo trees, the beauty of the silent stream with clear and icy chill water and the early morning breeze. What is this world, here, full of beauty and abundant joy? Sit down with me on the bank of this rivulet and dabble your feet in the clear water! Oh ! what a joy ! Can you feel a group of fishes nibbling at your feet ? What do they want ? Enjoy all this, but there is a condition. Leave your age and status behind. Your placement in the society makes no sense here. You must come as small boy or a girl, not more than 10 years old, without any inhibitions of a scheming mind! Is it possible ? YES, IT IS. ` Denizens of this forest do not
understand your status which is not your LIFE. It is your existence. Forget it. Be happy with me in this small tour and while you are at it, forget me as well ,and be to yourself.
But, then, how many times it could be possible to take a tour like that ? It is possible, eternally, with your MIND POWER.
Have you ever slept on the open terrace and watched the shining moon and the glistening stars ? What do they say silently ? Why do the stars appear in the same place and in the same shape every day ? Who ensures this discipline ? What is the size of the milky way in the millions of galaxies in the endless space out there ? What are the possibilities of existence of other planets like earth or anything better than that ? Will they support life system and if so, how they will look like ? Can we reach them, defying the proven speed of travel ? Enjoying all this is possible, with your mind power which is as unlimited and fathomless as the outer space !
I shall leave you to enjoy yourself and come back to you after some time, right ?

வியாழன், 28 ஜூன், 2012

EN VEEDU

வீடு பளிச்சென்றும் எப்போதும் சுத்தமாகவும் , வீட்டினுள் இருக்கும் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கவேண்டும் எனவும் ஒரு கொலை வெறியோடு இருந்தவர் என் பெரிய அண்ணன் அவர்கள். வீட்டில் படுத்த பாய் , ஜமக்காளம் , தலையணை அனைத்தும் அடுக்கி வைப்பது கூட எதன் மேல் எது வைக்க வேண்டும் என்பதில் ஒரு ஒழுங்கும் அதில்  எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்றும்  ஒரு எழுதாத சட்டம். உண்டு.. பென்சில் ஊக்கோடுதான் இருத்தல் வேண்டும். ரீபில் இல்லாத பேனா பார்த்தாரானால் வெளியே எறிந்து  விடுவார்.  வீட்டுக்கு வாங்க வேண்டிய மளிகை லிஸ்ட் கிட்சேன் சுவரில் ஒட்டி வைத்திருப்பார். அதன் படித்தான் வாங்க வேண்டும். அதிசயமாக அவர் வீட்டில் அவர் நினைத்த படி நடந்தது.

நானும் அவரை என் முன்னோடியாக கொண்டு என் வீட்டில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிதேன். ஒன்றும் நடக்க வில்லை. என் வீட்டுக்கு யார் வந்தாலும் , எங்கு உட்கார வேண்டும் என்று யோசித்துதான் உட்கார வேண்டும். சோபா மேல் ஒரு Air Bag . ஒரு pant shirt , காபி டம்பளர் , இன்னும் என்னென்னமோ இருக்கும். மீதி இடங்களும் அப்படிதான். டேபிள் மேல் ஜாடி,( மூடி இல்லாமல்), நியூஸ் பேப்பர் , டூத் பேஸ்ட் , இப்படி நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் இருக்கும். எது வேண்டுமானாலும் அரை மணி தேடி, அதிர்ஷ்டம் இருந்தால்தான்  கிடைக்கும். நம் தேடிய பொருள் எங்கே என்று கேட்டோமேயாகில் " அங்கேதானே இருந்தது " என பதில் வரும். இந்த நிலைமையை மாற்ற நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சண்டையில் வந்து முடியும்.

என் அண்ணன் என் வீட்டுக்கு வந்து இந்த நிலைமையை ஒரு முறை பார்த்தார்.
சரி, நானே எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறேன் என்று செய்தார். அடுத்த நாள் பழைய கதைதான். வெறுத்து விட்டார்.

குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வார். என் பையனுக்கு அவர் சொன்ன கதை.

ஒருவன் ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்தான். ஏரியில் ஏதோ ஒரு பாட்டில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்து பார்த்த போது அதன் உள் வெள்ளையாக எதோ உருவம் இருப்பதை பார்த்தான். அந்த உருவம் அவனோடு பேசிற்று. என்னை வெளியே விடு. உனக்கு நான் அடிமையாக இருக்கிறேன் என்றது. விவரம் தெரியாத அவனும் அதை வெளியே விட்டு விட்டான். வெளியே வந்த அது ஒரு பூதம்! பயங்கரமாக வளர்ந்து நின்றது. " எஜமான் ! எனக்கு வேலைக்கு ஆணை இடுங்கள்; செய்கிறேன். வேலை கொடுக்க முடியா விட்டால் உங்களை விழுங்கி விடுவேன்" என்றது.
வேலைதானே , சரி, காலி மனை ஒன்றை காட்டி இதில் ஒரு மாளிகை கட்டு என்றான். ஐந்து நிமிடங்களில் வேலை முடிந்தது. பர பரப்புடன் அவனுக்கு தெரிந்த வேலைகள் அனைத்தும கொடுத்தான். மீண்டும் மீண்டும்  பூதம் வந்து சேர்ந்தது. பயந்து போன அவன் தன குருவிடம் ஓடினான். பூதமும் பின்னே சென்றது. குரு சொன்னார், ' பயப்படாதே, வேலையை என்னிடம் கேட்டுக்கொள்ள சொல்" என்றார். அவனும் அவ்விதமே  செய்தான்.

குரு பூதத்திடம் என் வீடு அட்ரஸ் கொடுத்து , வீட்டை கிளீன் செய்து , எல்லாவற்றையும் அததன் இடத்தில எடுத்து வைத்து விட்டு வா" என்றார்.
"சரி" என்று சென்ற பூதம் வரவேயில்லை. அவன் என் வீட்டிற்கே வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் பூதம் மயங்கி விழுந்திருந்தது , வீடு முன்னிருந்த மாதிரிதான் இருந்தது. மனமிரங்கிய அவன் பூதத்துக்கு மயக்கம் தெளிவித்தான். எழுந்திருந்த பூதம் அவன் காலில் விழுந்து புரண்டு மன்றாடி கெஞ்சியது. " எஜமான், நீங்கள் கொடுத்த வேலையை செய்ய என்னால்  முடியாது. என்னை பாட்டில் உள்ளேயே  விட்டு விடுங்கள். நான் பிழைத்து போகிறேன் என்றது. அவனும் மகிழ்சிய்டன் பூதத்தை பாட்டில் உள்ளே விட்டு ஏரியில் எறிந்து  விட்டான்.

" இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்று கேட்ட என் அண்ணனிடம் " உங்கள் நேரம் சரியில்லை  என்று தெரிகிறது" என்றான் என் மகன்.  

திங்கள், 25 ஜூன், 2012

TRIP TO MALDIVES !

It was in the year 1977, I got my first passport after an NOC (No objection certificate) issued by the Government of India for issuing me a passport, since I was a Government employee . I was very enthusiastic about my possible 'overseas travel' and started to make plans for a trip to Maldives. I had another friend of mine, who also got his first passport , and was desperately banking upon me to make the tour plan to accommodate him as well.

Both of us bought airline ticket from Trivandrum to Maldives,(A group of islands in the Indian ocean, southwest of India, approximately 45minutes of flying time by a Boeing aircraft from Trivandrum.). Having successfully arranged that, we collected the information from one of my friends, who had been there to Maldives on several occasions on business trips. He informed me that Maldives Government has approved the residents of the country to entertain tourists in their houses, and could collect rent for their stay and pay a small portion as tax to the Government. My friend had also recommended me to one of his friends in Maldives, who could be my host.

Having arranged that, we planned for the travel and set out by train to reach Trivandrum from where we would catch a flight to Maldives. Everything went off very smoothly, and on the scheduled day of departure, we went through the formalities of immigration and customs and boarded our flight.
This was, incidentally, my first experience in a transport aircraft and I was thrilled ! I was looking out of the window ( I had requested for a window seat) and was waiting impatiently for the aircraft to move ! Now, suddenly , a thought struck my mind. I was an obsessive believer in ' cheiromancy' and was an ardent reader of all related books. I had 'reached a degree of proficiency' in the related subject, in my own opinion. Now, I looked at my hand to verify whether I had the 'travel line' cutting across from the mount of Luna to touch the Line of Life ! It was not there ! In no uncertain terms, it clearly indicated that I had no prospect of 'overseas' travel ! Then, what could happen ? Will I ever land into Maldives or crash into Indian Ocean? While I was considering all these aspects and analysed for a comfortable answer, the aircraft started taxiing out. Within the next 10 minutes, we were airborne, and my thoughts had faded away, as we started cruising. Within 40minutes, I could see the green coral islands, below us, and was thrilled. The aircraft made a smooth landing at the island airport of Maldives, called 'HULULE'. 'Hell with this palmistry', I thought. After quickly going through the formalities of immigration, health ( Pricked my fingers for blood samples !) and customs, we were outside. There were ferry services to the Capital city 'Maldives', which was 10 minutes distance by boat travel. The weather was good and I liked everything I saw. After a brief travel by the boat, we landed up on the shores of the city ' Maldives'. It is a 100% muslim country, has to import everything for its sustenance and most of the male community are employees of some shipping organization. The only natural resources is the fish from the sea.

The city was very small, ( in fact, from one end of the island to the other end, we could walk within 25 to 30 minutes) and we quickly reached the place where we had made arrangements for our stay. It was something like a group of rooms in a barrack in a Military camp. Each one had one room and an attached toilet. Never mind, we could not afford much and we were happy with what we got. The owner was an elderly lady, who also stayed in one of the rooms, on the opposite side of our barrack, separated by a paved verandah.
We set out for 'sight-seeing' and shopping. There are no animals and there are no birds in Maldives! Therefore , there was no 'sight seeing'. My friend, who was an orthodox Hindu brahmin, insisted on buying an electric stove to prepare the food for us. I did not care much for all these, but said OK. We returned back. For the dinner, we had a loaf of bread and vegetarian sandwich.

Next day, my friend 'prepared' lunch for both of us. Though it was awful, I did not complain. There was a small plantain tree in the campus and my friend, without any hesitation, cut two leaves to be used as plates. We threw the plantain leaves in the dustbin, which was near the tree itself. We had planned to stay in Maldives for 3 days, and after that to fly out to Sri-lanka.
In the afternoon, my friend suggested that he would prepare 'tea' for us. I tried to stop him. But he would not listen. He went ahead and prepared tea, by using the electric stove in the end of verandah. As he had finished his concoction, he tripped the kettle and the tea spilled over on the surface ! To add to the misery, the room on the opposite side opened and the owner lady appeared ! I just pulled myself inside my room and watched the proceedings. The lady was glaring at my friend and my friend was looking at her foolishly. He ,then , gathered courage and asked the lady, ' do you have a cleaning cloth ?'
The lady did not appear to have understood his idea. She might have thought that this arrogant guy was asking her to clean the spill ! She replied back tersely, ' You dirty , you clean'. I could not contain my laughter any more. After my friend cleaned up the area under her supervision, he went to throw the dirty cloth in the dust-bin. The owner lady followed him there also. She looked with disbelief the plantain tree without any leaves and the used up leaves inside the bin ! She questioned him, ' who do this ?' My friend meekly replied ' we used it' and went ahead to comfort her, ' Do you eat plantains ?' . There was no reply. Who knows? For all you know,the lady must have thought that my friend was suggesting to her to eat the plantain leaves from the dust bin !What an arrogance ! She glared at him in anger, did not say a word and walked away. my friend was very angry with me for my 'unfriendly' attitude of not helping him but enjoying the fun ! What could I do ? Every one has a natural character. I could not change mine.

புதன், 13 ஜூன், 2012

Autobiography of a Ghost !

ஆதம்பாக்கம் சுடுகாட்டில் அமைதியாக வசித்து வந்த என்னை அடித்து ஓட்டி விட்டு தில்லை கங்கா நகரை உருவாக்கி விட்டார்கள் . அதன் முன்னர் ஸ்கூல் செல்லும் பிள்ளைகள் எங்கள் சுடுகாட்டின் வழியாகத்தான் செல்ல வேண்டும். " அப்பா எனக்கு பயமாக இருக்கிறது " என்று சொன்ன ஒரு பையனிடம் அவன் தந்தை "  "Dead men dont do mischief ; Beware of the living " என்று கூறியதை கேட்டு என் இதயம் இருந்த இடம்  நெகிழ்ச்சியில் விம்மியது. ஆனால் எத்தனை பேர் அப்படி நினைக்கிறார்கள்? அவர் கூறியது கூட மகனுக்கு ஆறுதல் வார்த்தைகளே ஒழிய எனக்கு அனுதாபமாக இல்லை என்பது எனக்கு கூட புரிகிறது.  போகட்டும் இது வாழ்பவர்கள் என நினைப்பவர் உலகம். எங்களுக்கு இடம் இல்லை. எங்களை விரட்டும் பணியில் பிழைப்பை நடத்தும் மந்திரவாதி மற்றும் பூசாரி வர்கங்கள் எங்களுக்கு என்ன செய்கிறார்கள். அவர்கள் பிழைப்பை நடத்த உதவும் உயிரில்லாத கருவிகளுக்கு ஆயுத பூஜை செய்யும் இந்த மனித வர்க்கம் எங்களுக்கு பூஜை செய்யா  விட்டாலும் போகிறது';  வேப்பிலையாலும் தொடப்பத்தாலும் அடிக்காமல் இருந்தாலே நன்றியுடன் இருப்போம். போதாததற்கு பலர் வீட்டில் தூங்கும் முன்னர் வாசற்படியில் உலக்கை,தொடப்பம், செருப்பு ,அப்புறம் அருவாள் வேறே, எங்களை மிரட்ட .

புலம்பி புண்ணியம் இல்லை. எங்களுக்கு என்று ஜாதி மதம் மற்றும் அவர்களின் போராட்ட பாதுகாப்பும்  இல்லை ; ஜாதி ஒழிய வேண்டும் என்று கூவும் சங்கங்களும் சாதியற்ற எங்களை அடிப்படை அங்கதினர்களாக சேர்க்கவில்லை. ஜாதியற்றவர்கள் அனைவரும் நாதியற்றவர்கள் என்று
அனுபவிக்கும் எங்களுக்கு  புரியும். எந்த சாதி இனமும் கிட்டே சேர்க்காது.  கடவுள் கூட எங்களுக்கு கிடையாது. எங்கு போவோம் நாங்கள்?  நானாவது பரவாயில்லை; எனக்கு மறைந்து வாழ ஒரு வீடு இருக்கிறது. வறுமை கோட்டின் கீழ் வாழும் பல பேய்கள் புளிய மரத்தின் மேலும் , இன்னும் பல பேய்கள்  இடிந்து நொறுங்கிய பாழடைந்த ஒட்டு வீடுகளின் ஒட்டடைக்கு நடுவிலே ஒளிந்து வாழ்கிறார்கள் ,பாவம்.

போகட்டும் புலம்பல், என் கதைக்கு வருவோம். நான் ஏன் பேயாக மாறினேன் என்பதை அறிய ஆவலாக இருப்பீர்கள். அனைவரும் இறந்த பின்னர் பேயாக அலைய வேண்டிய கட்டாயம் இருக்கிறதா , அதில் நல்ல பேய் கெட்ட பேய் என்ற பாகுபாடு உண்டா என்றெல்லாம் கேள்வி வைத்திருப்பீர்கள். முடிவில் எங்களை வைத்து எதாவது செய்ய முடியுமா , உங்களால் எதிர்க்க முடியாத நபர்களை எங்களை வைத்து தீர்த்து கட்ட முடியுமா என்று நினைப்பீர்கள். அது எதுவும் முடியாது. எங்களை விரட்டாமல் ' வாழ' விட்டால் உங்களுக்கு உதவியாக இருப்போம். உங்களில் கெட்டவர்கள் இருப்பது போல் எங்களிலும் கெட்ட பேய்கள் உண்டு.உங்களிலிருந்து உருவானவர்கள்தானே .ஆனால்  நான் நல்ல பேய். வாழ்ந்து செத்தவன். மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். இந்த 'தொங்கல்' காலத்திலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவியை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் நூறு வருடங்களுக்கு முன்னே இறந்தேன்.   ஒரு சிறு கிராமத்தின் பஞ்சாயத்தின் நாட்டாமையாக  இருந்தேன். அந்த காலத்தில் எல்லாம் உங்கள் சினிமாவில் வருவது போல் சொம்பு பஞ்சாயத்து எல்லாம் கிடையாது.எனக்கு பிடித்த உங்கள் சினிமா நடிகர்கள்  விஜயகுமாரும் சரத் குமாரும்தான்.
 நாட்டாமை வேஷத்தில் நிறைய நடித்திருகிறார்கள்.ஆனால் நான் என் தீர்ப்பை மாற்றி எல்லாம் எழுத மாட்டேன். கௌரவக்கொலை ( honour killing) எல்லாம்  இல்லை. என்னிடம் எல்லாரும் பயத்துடனும் மரியாதையுடனும் இருந்தார்கள்.ஆனால் ஊரென்றால் மற்ற வ்யவகாரமும் இருக்கும்தானே. எனக்கும் எதிரிகள் பங்காளிகள் உருவில் இருந்தார்கள்; காத்திருந்தார்கள் கௌரவர்கள் கணக்காக.

வாழ்வு முடிவதற்கு முன்னே துர் மரணம் அடைபவர்கள் மறு பிறவிக்காலம்  வரை பேயாகவோ, பிசாசாகவோ அலைய வேண்டும் என்று ஆண்டவன் விதித்தாராம் . அது என் விஷயத்தில் உண்மையாகி விட்டது. ஒரு நில வழக்கில்  பங்காளிகளுக்கு எதிரான  என் தீர்ப்பு என் கொலையில் முடிந்தது. என்னை கொண்டு வந்து புதைத்த பின்னர், நான் மட்டும்தான்  இருந்தேன்.அப்போதேல்லாம் வீடுகள் அதிகம் கிடையாது. என் சுடுகாட்டின் அருகே வீடு ஏதும் இல்லை. பக்கத்திலே ஓர் ரயில்வே லைன் இருந்தது  பக்கதிலிருநத ஒரே கோவில் அரிச்சந்திரன் கோவில்தான்.பிணத்தை கொண்டு வருபவர்கள் அரிச்சந்திரன் கோவில் அருகே சற்று நேரம்
காத் திருப்பார்களாம் . ஒருக்கால் பிணத்திற்கு உயிர் வந்து விட்டால் திருப்பி கூட்டி கொண்டு செல்வார்கள். இல்லையேல் இறுதி சடங்குகள் நடக்கும். காட்டின் உள்ளே வந்த பின்னர் உயிர் வந்தால் கூட்டி செல்ல முடியாதாம் ஊருக்குள்ளே. இப்போது உரையே சுடுகாட்டுக்குள் கட்டி விட்டார்கள். என்ன ஆச்சு இவர்கள் சாத்திரம்? ஊருக்குள்ளே இருந்தவர்கள் சுடுகாட்டுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் ஊருக்குள்ளே இருக்கிறோம். சவங்களுடன் சமத்துவம்!!
உயிரோடு இருப்பவர்களுடன் சண்டை!

இப்போது நான் இருப்பது ஓர் வாடகை வீடு. அதாவது எனக்கு பிடித்த நபர்கள் இந்த வீட்டில் குடியிருக்கிறார்கள். மனித தன்மையுடன் கூடிய ஒரு நல்ல குடும்பம். ஆகவே வாழ தெரியாதவர்கள். நான் அவர்களுடன் இருப்பதை அறிவார்களா என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சில சமயங்களில் இந்த வீட்டின் பெரியவர் ' மாடிப் படியில் யாரோ இறங்கி வருவது போல் இருக்கிறது' என கூற கேட்டிருக்கிறேன். அனால் அதற்காக யாரும் பயப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு முன்னர் இருந்தவர் எல்லாம் 5 அல்லது 6 மாதங்களே  இருந்து பின்னர் மாறி விடுவார்கள். இவர்கள் அப்படி இல்லை. குடும்ப தலைவருக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது. சிறியவனுக்கு பெண் பார்க்க வேண்டுமென்று பேசி கொள்கிறார்கள். நல்லவர்கள். வரும் பெண் நன்றாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். I have become a member of their family, an unseen guest . 


என் ஆசை வீண் போகவில்லை. இளையவனுக்கு கல்யாணம் பேசி முடித்தார்கள். ஆவலுடன் காத்திருந்தேன். அடுத்த மாதம்  கல்யாணமாம்.

அந்த நாளும் வந்தது. கல்யாணம் முடிந்து அவர்கள் தேன் நிலவுக்கு- அப்படி என்றால் என்ன?- சென்று விட்டு வந்தார்கள். நான் மாடி படி அருகே நின்று கொண்டிருந்தேன். ஆரத்தி எடுத்து விட்டு வீட்டுள் கூட்டி  வந்தார்கள்.

அவள் நான் நின்றிருந்த இடத்தை நிமிர்ந்து பார்ததாள் . இது என்ன? எனக்கு என்ன ஆகிறது? அவள் முகத்தை பார்த்த பின்னே எனக்கு ஏன் வேறு எதுவும் பார்க்க முடியவில்லை! 'அம்மா'!! என்று என் இல்லாத இதயம் கூவிற்று! கடவுள் எனக்கு வழி காட்டி விட்டார் என்று தெரிந்து விட்டது! அம்மா என்னை எடுத்து கொள் என்று யாருக்கும் கேட்காமல் கெஞ்சினேன்.

இனி உங்களிடம் பேச எனக்கு நேரமும் இல்லை- ஆசையும் இல்லை.





வியாழன், 7 ஜூன், 2012

NEENGALUM VELLALAAM ORU KODI !

Kaun Banega Karodpathi யின்  மறு பதிப்பாக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவி யில் ஆரம்பித்த போது  அதன் வெற்றியில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது . அமிதாப் பச்ச்ஹன் நடத்திய ஒரு நிகழ்ச்சியை சூர்யா எட்டி தொடுவாரா என எண்ணினேன்.  எனது அபிப்ராயத்தின் தவறை எவ்வளவு மகிழ்ச்சியுடன் உணர்கிறேன் என்பதற்கு எனது வெளிப்பாட்டில் வார்த்தைகள் இல்லை. அடடா ,  அவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களிலும் கிடைக்காத ஒரு கௌரவமும் பெருமையும் அவருக்கு இதன் மூலம் வந்துள்ளது. அவர் கண்களில் தெரியும்  ஓர் கருணையும் அன்பும் கண்டிப்பாக ஒரு நடிகரின் வெளிப்பாடு இல்லை.வீடியோ கிளிப் டைரக்டர் மற்றும் கலைஞர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து புகழ்ந்த விதம் மிகவும் உயர்வாக இருந்தது .  எவ்வளவு பெரிய மனிதர் இவர்?  இவரை மகனாக அடைந்த சிவகுமார் தம்பதியினர் கொடுத்து வைத்தவர் என்றால் இந்த நூற்றாண்டின் கொடுத்து வாய்த்த மனைவி ஜோ என்பதில் இரண்டாம் கருத்து கிடையாது.

ஒரு பொழுது போக்கும் நிகழ்சியை மானிட நேய நிகழ்ச்சியாக மாற்றி அமைத்துள்ளார். எவரையும் புண் படுத்தும் வார்த்தைகள் கிடையாது. தற்புகழ்ச்சியின் வெளிப்பாடு வார்த்தையிலும் இல்லை; முக வெளிப்பாடுகளிலும் இல்லை..  நடிப்பே இல்லை. பேசுபவர்களை தன்னுடன் அழைத்து செல்லும் இவர் பாங்கு ஒரு தலைவனுக்கே உரித்தானது. எனக்கு ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். எவ்வளவு பணம் , பதவி, பெருமை இருந்தாலும் அதோடு ஒட்டாமல் ஒரு சன்யாசியின் பண்போடு இருக்கும் அவரின் இயல்பு மிகவும் பிடிக்கும். அவர் வழி தனீ வழி!  ஆனால் சூர்யா வேறு விதம்.

எனக்கு 65 வயது. எனக்கு பிடித்த கடவுள் சூர்யன். என் இரண்டு பேரன்களின் பெயர் சூர்யநாராயணன் , ஆதித்ய நாராயணன். இதனால்தான்   எனக்கு சூர்யா பிடித்தது என்று நினைககதீர்கள். சூர்யா எனக்கு அவர் பொருட்டே  மரியாதைக்குரியவர் .


விஜய் டிவி கொடுத்து வாய்த்த டிவி சேனல். என் கருத்துகளை படிக்கும் எவரும் இதில் தவறு காண மாட்டார்கள். நடிகர்கள் என்றல் எதோ பொழுது போக்கும் கலைஞர்கள் என்றும் நினைக்கும் பலருக்கும் சூர்யா இருள் போக்கும் ஒளி .

ஞாயிறு, 27 மே, 2012

Kaiber Tamizhan: Kaasu Kanavu !

Kaiber Tamizhan: Kaasu Kanavu !: கனவுகள் பல விதம் ! ஆழ் மனத்தின் வெளிப்பாடுகளே கனவுகள் என நம்புபவர் பலர் . கனவில் பாம்பு வந்தால் செக்ஸ் என்றார் சிக்மன்ட் பிராய்ட் . காசு வர...

வெள்ளி, 25 மே, 2012

Kaasu Kanavu !

கனவுகள் பல விதம் ! ஆழ் மனத்தின் வெளிப்பாடுகளே கனவுகள் என நம்புபவர் பலர் . கனவில் பாம்பு வந்தால் செக்ஸ் என்றார் சிக்மன்ட் பிராய்ட் . காசு வரவு என்கிறார் என் நண்பர் ஒருவர். பாம்பு தோஷம் நாக தேவதைக்கு பூஜை செய்யவேண்டும் என்கின்றார் பூசாரி. நேஷனல் ஜாகரபி அடிக்கடி பார்த்தல் காரணம் என்கிறார் ஒரு நண்பர். மொத்தத்தில் கனவுகள் தெரிவிப்பது என்ன என்பது யாருக்கும் விளங்கவில்லை. கனவுகளும் நம் விருப்பத்துக்கு ஏற்ப வருவதில்லை. பிரச்னைகளுக்கு கனவில் விடை கிடைக்கும் என நம்புபவர் பலர். ஆனால் அப்படி வருவதில்லை. ஆழ்ந்த உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் மனதை ஆல்பா நிலையில் கொண்டு வந்து நம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்று ஓர் அறிஞர் கூறுகிறார். நம்புபவர்களும் பின்பற்றுவோரும் நிறையவே இருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் கருத்து கூறுமளவு நமக்கு ஞானம் இல்லை. என் கனவு காசு கனவு.  அடிக்கடி வருகிறது. பேராசைதான் காரணம் என்று முடிவு கட்டாமல்( உண்மை என்னமோ அதுதான்)  என் கனவுக்கதை கேளுங்கள்.
சில்லறை காசு முதல் புதையல் வரை பல கனவுகள்!  ஒரு இடத்தில காசு இருந்து அதை எடுத்தால் இன்னும் இன்னும் நிறைய காசுகள் சுற்றி கிடக்கின்றன. முடிவே இல்லை ! எழுந்து பார்த்தால் எட்டணா கூட கிடையாது.
இதன் முன்னேற்ற பாதையிலே தற்போது வரும் கனவு பூமிக்கடியிலே புதையல்!   கனவு என்னமோ மெகா சீரியல் மாதிரி முடிவு தெரியாத விதத்தில் போய் கொண்டிருக்கிறது . நான் இதை ஆழ் மன முடிவுக்கு விட்டு பிரயோஜனமில்லை என்று  என்  புதையல் கனவை என் அறிவு ஆராய்ச்சிக்கு கொண்டு வந்து செயல் முடிவு காண நினைத்தேன்.  நான் செய்தது தப்பு என்று இப்போது புரிகிறது!
புதையல் என் வீட்டு தோட்டத்தில் இருக்கிறது. எவ்வளவு ஆழத்தில்?  ரொம்ப நாள் முன்னர் யாரோ குறு மன்னர் புதைத்தது. ஆகவே எப்படியும் 10 அடி கீழேதான்  இருக்கும் . அதை தோண்டி எடுப்பது கஷ்டம் . மேலும் என் வீடு இருப்பது திருச்சியில் . ஆகையால் என் கனவும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் எங்கு என்று தெரியாது. என் நண்பர் ஒருவரிடம் பொதுவாக புதையல் எடுக்கும் விதத்தை விசாரித்தேன். அவர் சீரியஸ் ஆகி விட்டார்.    நிஜமாகவா சார் ? இதையெல்லாம் எடுப்பது கஷ்டம் சார். புதையல் ஒரே இடத்தில இருக்காது தெரியுமா? நகர்ந்து கொண்டே இருக்கும் சார் ; அததோடு அது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்களுத்தான் கிடைக்கும். கிடைக்காதவர்களுக்கு  கிடைக்காது என்றார். சரி, எனக்கு கிடைக்கவேண்டும் என்றால் என்ன செய்ய  என்றேன் . " புதயலை பூதம் காக்கும் சார் ", " முதலில் அதற்கு கர கிங்கரர்களை எழுப்பி கிங்கர பூஜை செய்ய வேண்டும் " என்றார் நண்பர். கர கிங்கர பூஜையா , கேட்கவே பயமாக இருக்கிறதே என்றேன் நான். புதையல் என்றால் சுலபமில்லை சார்,  பூஜை செய்து முடித்த பின் பலி கொடுக்க வேண்டும் என்றார் . பலியா , என்ன பலி ? " அது புத்யலின் தன்மைக்கு ஏற்றபடி இருக்கும் "
"கோழி பலியா அல்லது நர பலியா என்று கர கிங்கரர்கள் முடிவு செய்வார்கள் " என்றார் நண்பர்.  ஏக்தா கபூரையே எள்ளி நகையாடும் விதத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டதாகி விட்டது என் கனவு சீரியல். என்ன இருந்தாலும் முன் வைத்த  கனவை பின் வைக்க முடியாது அல்லவே.  மேலும் விவரம் கூறும் என்றேன். " பூஜை முடித்த பின்னர் அமாவாசை நாளில் , நள்ளிரவில் அகல் விளக்கு வெளிச்சத்தில்  தோண்ட ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
சரி, இப்போதைக்கு  இந்த விவரம் போதும் என்று விட்டு விட்டேன். சரி , பூஜை ஆகி  விட்டது , பலியும் கொடுத்து விட்டோம் என்று வைத்துக்கொண்டு என் கனவு  சீரியல் நினைவில் தொடர்ந்தது . புதையல் கிடைத்தாலும் அது அரசுக்கு  சொந்தமென்று வந்தால் ? ஆகவே புதையலை ரஹ்ச்யமாகதான் எடுக்க வேண்டும்.  களைப்பில் தூங்கி விட்டேன்.
கனவில் மறுபடியும் புதையல். யாரையும் நம்பி கூப்பிட முடியாது. நாமேதான் தோண்ட  வேண்டும். யாரை கூப்ட்டாலும் பங்கு கேட்பார்கள் பின்னர் காட்டி கொடுத்து விடுவர்ர்கள்.  அப்புறம் என்ன ? ரைடுதான் . வட்ட ஆட்சியர் , வருவாய் ஆட்சியர் , காவல் துறை அதிகாரிகள் , வேடிக்கை பார்க்க பெரும் கும்பல்,  போதாத தற்கு  தொலை காட்சி காமெரா வேறே ! புதயலுடன்  என் வீட்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி! ஐயோ வேண்டாம் , தனித்து இயங்குவோம் என்று கடப்பாரையடன்  களத்தில் இறங்கினேன். இரண்டு மணி நேர முயற்சிக்கு பின்னர் கடப்பாரை எங்கோ இரும்பு பெட்டியில் இடித்தார் போல் கேட்டது. ஆஹா, கிடைத்தது நம் புதையல் !
பெட்டி ஒரு சிறிய பெட்டிதான் , இரண்டு அடிக்கு மூன்று அடி இருக்கும். அதை அசைக்கவே முடியவில்லை . சரி நாளைக்கு பார்க்கலாம் என்று  கனவு முடிந்தது.
சரி, அதன் உள்ளே என்ன இருக்கும் ? அனந்த பத்மநாபா சுவாமி ஆறாம் அறை போல  அரவங்கள் இருக்குமோ?  தங்கம் இருந்தால் அதை எப்படி காசாக்குவது? அப்படியே விற்க போனால் நிச்சயமாக தெரிந்து விடும். ரைடு தான்.  ஆகவே உருக்கி விற்று விடலாம். ஆனால்  உருக்குவது எப்படி ? பொற் கொல்லரை  கூப்பிட்டால் போட்டு கொடுத்து விடுவார என்றாள் மனைவி .
அட சீ, கனவு கனவுதான் , நிஜம் நிஜம் தான், இந்த ரீ மிக்ஸ் நமக்கு சரி வராது என்று புரிந்து விட்டது. ஆழ் மனதை அலசவும் வேண்டாம் அதன் அர்த்தங்கள் புரியவும் வேண்டாம். கனவுகள் இனிய கனவுகளாகவே இருக்கட்டும்.. நாம்  நாமாகவே இருப்போம் !