ஞாயிறு, 30 செப்டம்பர், 2012


WRONG APPROACH !!

Capt Neil Roberts ambled slowly towards his aircraft 4R-AJL, a turboprop aircraft, sitting on Bay-5 in the Katunayake International Airport, Srilanka, waiting for departure on its scheduled flight UL-207. First Officer William had already gone to the aircraft and the aircraft was now boarding.
The weather was clear with blue sky and there was no forecast for any adverse weather conditions enroute.
Capt Neil, boarded the aircraft, said hello to the chief cabin executive and entered the cockpit and positioned himself. First officer williams had already prepared the cockpit for departure.
With formal exchange of greetings, Capt.Neil called up ATC for Start up and taxi clearance.
ATC Colombo cleared UL207 to start up and cleared the aircraft to taxi out to the active runway 04, enter the runway and line up.
Capt UL207 taxiied to runway. Called up ATC
Tower UL207 Request ATC departure instructions
UL207 copy ATC – Colombo clears UL207- Colombo to Trichy- Via Flight Plan Route- To cruise and maintain FL 160 – Departure after take off Runway 04- Turn left, intercept radial 345 and climb to cruising level unrestricted.
Roger-Copied –Request Take off
UL207 Cleared for Take off- surface wind 050 degrees 06 Knots
Roger – Rolling
UL207 made a smooth take off, slowly turned left while climbing and set course., towards its destination.
Mr.Kenneth George was on morning duty in ATC control- Trichy. With two departures already gone, the only arrival was UL207 from Colombo, expected at 1030hrs.
Capt Neil was 60 miles out of Trichy and called up. Mr.George heard his call and responded to the aircraft and passed local weather to pilot.
AT 1020hrs Capt Neil called up ATC Trichy:
Trichy Tower- UL 207- I have your field in sight- Request permission for a straight in approach for Runway 27.
George cleared the aircraft for straight in approach and advised the aircraft to report finals
UL207 agreed
At 1023, UL207 reported finals for Runway 27. Mr.George, who was looking somewhere else through his binoculars, cleared the aircraft to land.
UL207 you are cleared to land- Surface wind 290 deg 04knts.
Capt.Neil Roberts, was in fact, was on finals to a disused second world war aerodrome, near Tanjore, 15 miles East of Trichy, Not knowing the wrong approach, he made a smooth landing on the disused runway. And cut his speed.
‘There was something seriously wrong’ he thought. There were no Crash Fire Tenders and no ATC building at all !
He realised now that he had landed at the wrong airport !
Mr.George called up UL207 for taxi clearance, but to his horror found that there was no aircraft ! What happened ? Has he crashed ? He gave numerous calls- No answer !
Meantime, Neil quietly backtracked on the runway to the beginning and took off again- As the aircraft was speeding down the runway on take off roll, he saw a man standing near the building and watching the aircraft !


As he climbed, he gave a call to ATC Trichy. George felt greatly relieved. The airacraft reported for finals again within 5 minutes and landed at Trichy.
After blaming each other for lapses, both the controller and the pilot decided to push the case under the carpet.


Exactly, after one month, Mr.George got a letter from his headaquarters- to explain the reasons for not submitting an incident report into the case of wrong approach and landing and the reasons ! The man in the disused airport, who was the care taker, made a complaint to Headquarters that an aircraft with registration 4R AGL, made a landing but took off without paying landing charges. The time and date along with the registration let the cat out of the bag !

வியாழன், 27 செப்டம்பர், 2012

TAMIZHAN


ஜாதி ஒழிக- தமிழ் வாழ்க!
என் வீட்டு நாய் லப்ரடோர்
very ferocious !

கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புபவன் அயோக்கியன் 
ஊரில் என்பெயர்  ராமசாமி

குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூழுக்கு வழி இல்லை
கும்பிடும் சாமிக்கு பாலபிஷேகமா
அம்பாளை தரிசனம் செய்தீரே - என்றால் 
அங்காளம்மனக்கு அங்கலாய்ப்பு வேண்டாம் என்றுதான் - 

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
கொண்ட காரியத்தில் கண் வைய்யடா தாண்டவக்கோனே
ஆரியர் யார் என்று அறியாத தாண்டவக்கோனே
ராவணனே பார்பனன் தான் தாண்டவ்கோனே 
ராவணனை தமிழன் என்றால் தாண்டவகோனே
அனைத்து சிங்களவரும் தமிழர்தானே தாண்டவகோனே!

சனி, 11 ஆகஸ்ட், 2012

NAADI ASTROLOGY !!


நாடி ஜோதிடம் என கூறப்படும் இந்த ஆரூடம் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் , சிதம்பரம் அருகே வைதீஸ்வரன் கோயில் என்னும் ஊரிலும் , மற்றும் திருச்சி அருகே திருவானைகாவிலும்  பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த வகை ஜோதிடத்தில் நம்முடைய வாழ்க்கை நிகழ்சிகள் அனைத்தும் ஏட்டு சுவடிகளில் பதிவாகி இருக்கும். இந்த ஏட்டு சுவடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முனிவர்களால் எழுதப்பட்டு , தற்சமயம் ஜோதிடர்களால் நமக்கு தெரியப்படுத்தப்படும் ஆரூடம்.   பொதுவாகவே எனக்கு இவ்வகை ஜோதிடங்களில் அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

அப்போது நான் திருச்சியில் பணி புரிந்து வந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நாடி ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜோதிடம் பார்க்க வேண்டும் என அவர் கூற, நானும் அவருடன் திருவானைக்கா சென்றோம். நாடி ஜோதிடர் இருந்த இடத்தை கண்டு பிடிக்க சிரமம் எதுவும் ஏற்படவில்லை. எனக்குள் பல சந்தேகங்கள். இது என்ன நம் முற்கால முனிவர்களுக்கு நம் ஜோதிடம் எழுதி வைப்பதில் என்ன ஆர்வம்? எல்லோருக்கும் எவ்விதம் எழுத முடிந்தது ? அமெரிக்கா ருஷ்யா போன்ற நாடுகளில் வசித்து வரும் மக்களுக்கு எழுதப்பட்டு இருக்குமா?  இதில் முன் ஜென்ம நிகழ்சிகளையும் , வரும் ஜென்ம நிகழ்சிகளையும் எவ்விதம் எழுதினர்? அவை அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , நம் வாழ்க்கை நம் கையிலே இல்லையா? நம் வாழ்க்கையில் நமது சுதந்திரம் என்ன?  மேலும் இந்த ஜோதிடம் பலரால் கூறப்படும்போது ஏட்டு சுவடிகள் எல்லோருக்கும் எவ்விதம் கிடைத்தது? இதை எழுதியதாக கூறப்படும் முனிவர்களின் நோக்கம் என்ன? இது போன்ற பல சந்தேகங்களுடனே சென்றேன்.


ஜோதிடர் இருந்த வீடு ஒரு மாடி வீடு. உள்ளே சென்றோம். ஜோதிடர் மாடியில் இருப்பதாகவும் சென்று பார்க்கலாம் என்றும் அங்கு இருந்தவர் கூறினார். மேலே மாடியில் ஒரு பெரிய ஹாலில் ஜமக்காளம் விரிக்கப்பட்டு அங்கே ஜோதிடம் பார்க்க வந்தவர் சிலர் அமர்ந்திருந்தனர். ஜோதிடரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.  எங்கள்  பெரு விரல் அச்சு ( மையில் ஒற்றி ) எடுத்துக்கொண்ட ஜோதிடர் , " உங்கள் சுவடிகளை தேடி வைக்கிறேன். நீங்கள் நாளைக்கு வாருங்கள்" என அனுப்பி வைத்தார். எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. எனது நண்பரிடமும் சொன்னேன். " சரி பரவாயில்லை - நாளை வந்து பாப்போம்" என்றார்.

அடுத்த நாள் மறுபடியும் அவரிடம் சென்றோம். எங்களை அமர சொன்ன அவர் உள்ளே சென்று சில சுவடிகளை கொண்டு வந்தார். எங்களிடம் " நான் இந்த சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் பெயர்களுடனும் மற்ற விவரங்களுடனும் ஒத்திருந்தால் , அதை மேலே படிக்கிறேன். இல்லாவிடில் , மற்ற சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் சுவடிகள் வரும் வரையில்" என்றார்.

முதலில் எனக்கு ஜோதிடம் பார்ப்பதாக சொன்ன அவர் சில சுவடிகளை படிக்க ஆரம்பித்தார். என் பெயர் சரியாக இருக்கும்- ஆனால் தொடரும் விவரங்கள் சரியாக இருக்காது. கடைசியில் ஒரு சுவடி எடுத்து அவர் படிக்க ஆரம்பித்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன்!!
என் பெயர் சரியாக இருக்க, என் தந்தை தாயார் பெயர்கள், என் வயது , என் உடன் பிறந்தோர் விவரங்கள் அனைத்தும் அந்த சுவடியில் இருந்தன!


அந்த சுவடிகளை அவர் எனக்கு காண்பித்தார். மிகவும் பழைய சுவடிகள்தாம். அனைத்தும் பாட்டு வடிவத்தில் ( தமிழில்) எழுதப்பட்டு இருந்தன. முதலில் அவர் என்னுடைய பிறந்த நாள், அன்றைய கிரக நிலைகள், பிறந்த நேரம் ( நாள்- மணி-நிமிடங்கள்-) அனைத்தும் இருந்தன. அவரிடம் நான் சென்ற சமயத்தில் என் வயது, நான் பணி புரிந்து வந்த இடம், என் குழந்தைகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருந்தன. பின்னர், என் வருங்கால நிகழ்சிகள் அனைத்தும் எழுதப்பட்டு இருந்தன. அவை அனைத்தையும் ஓர் நோட்டு புத்தகத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். என் நண்பருக்கு அன்று சுவடிகள் கிடைக்க வில்லை. அதற்கு அடுத்த நாளும் சென்று அவருக்கும் பார்த்தோம்.
இதற்கு நான் ஜோதிடருக்கு கொடுத்தது  Rs 500  மட்டும்தான்.


திரும்பி வரும்  வேளையில், எனக்குள் பல எண்ணங்கள். இவருக்கு எப்படி இந்த விவரங்கள் கிடைத்தன? ஒருக்கால் முதலில் படித்த சுவடிகளின் மூலம் நான் கொடுத்த விவரங்களை வைத்து சொல்கிறாரோ?  அது இருக்க வாய்ப்பில்லை. என் மனதை படித்து சொல்லி இருப்பாரோ? அதுவும் இருக்க வாய்ப்பில்லை- ஏனெனில் என்னுடைய ஜாதகம் எனக்கே சரியாக தெரியாது. மிகுந்த குழப்பத்துடனே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் இருந்த என் ஜாதகத்தை எடுத்து பார்த்தபோது எல்லா விவரங்களும் சரியாக இருந்தன!

இந்த நாடி ஜோதிடத்தில் நான் விஞ்ஞான ரீதியாகவோ அல்லது என் பகுத்தறிவு ஆராய்ச்சி மூலமாகவோ ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கு புரியாத , மூளையால் பகுத்தறிய முடியாத நிகழ்ச்சி இது.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இது நடந்து ஒரு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. வருங்கால நிகழ்வுகள் என அவர் எழுதி கொடுத்திருந்தவைகள் பல தவறாக இருக்கிறது!  அவர் எழுதி இருந்தது போல் நடக்க வில்லை !!

இருக்கும் நிகழ்ச்சிகளையும், சென்றவைகளையும் சரியாக சொல்லும் இந்த நாடி ஜோதிடம் ஏன் வருங்காலத்தை சரியாக கூற வில்லை?
என்னுள் எழும் பல ஐயங்களுக்கு இன்னும் விடை இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது முனிவர்களுக்கும் இந்த சுவடிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதன் உண்மையான விவரங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என்பது ஒரு சாத்தியக்கூறு  ! பார்க்கலாம்-  வேறு எதாவது தெரிந்து கொள்ளும் போது இதன் மர்மங்கள் புலப்படலாம!!











திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ALL IS WELL THAT ENDS WELL !!!


அண்மையில் ஒரு ருசிகரமான செய்தி படித்தேன். ஊருக்கு பொதுவான கிணறு ஒன்றில் இரண்டு  ௫௦௦500  காசு தாள்கள் மிதந்து கொண்டிருப்பதை கிராம மக்களில் யாரோ பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து காண்பித்தாராம் .  உடனே நம்மூர் கலாச்சாரப்படி அவரவர் தனக்கு தோன்றியதை வதந்தியாக பரப்பினர். சிபிஐ ரைடுக்கு  பயந்து யாரோ ஒரு பெரும் பணக்காரர்  பாலிதீன் மூட்டையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து கிணற்றில் கொண்டுவந்து வீசி விட்டு சென்றதாகவும் , (பின்னர் எடுத்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில்!) அது கொண்டு வரப்பட்ட காரை பார்த்ததாகவும் சொல்ல, நம் கிராம மக்கள் உடனேயே செயல் வீரர்களாகினர்!!

நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று உடனேயே செயல் படுத்தப்பட்டு; கிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரும்
 ' மூட்டை '  கண் படாததால் , தூர் வாரி , சேறு மண் வெளியேற்றப்பட்டது. அப்போதும்  மூட்டை கண்படவில்லை. ஏமாற்றமடைந்த மக்கள் " அப்போதே நினைத்தேன் " போன்ற வசனங்களை உதிர்த்து விட்டு,  நீர் இறைக்கவும், தூர் வாரவும் ஆனா செலவை பொது செலவாக்கி சென்றனர்.

எது எப்படியோ , சுத்தம் செய்யப்படாத ஊர் கிணறு சுத்தமானது.!
இந்த வதந்தி இல்லாவிட்டால், யார் அந்த கிணறை கவனிக்க போகிறார்கள்?

இதன் பின்புல ஆராய்ச்சியாக , மக்களின் நம்பிக்கை பொதுவாக இயற்கையை ஒட்டியதாக இல்லாமல், "பர பரப்பான"  கற்பனைகளை ஒட்டியதாகவே  இருக்கிறது.  இதை பயன் படுத்திதான் நம் செய்தி தாள்கள் ( அனைத்தும் அல்ல- ) பிழைப்பு நடத்துகின்றன!

ஒரு சமயம் பரபரப்பு செய்தி ஒன்று- " ராஜா ஜிக்கி" கல்யாணம். ! சரியாக பார்க்காத மக்கள் ஆர்வத்துடன் செய்தி தாளை வாங்கி பார்த்தால், பின்னணி பாடகர்கள் " திரு ராஜா அவர்களும் , செல்வி ஜிக்கி அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்!

" பிரதமர் இந்திரா ஜட்டியுடன் பறந்தார்!! இது என்னடா கொடுமையாக இருக்கிறதே என்று பார்த்தால், பிரதமர் இந்திரா , உதவி ஜனாதிபதி திரு ஜட்டி உடன் விமானத்தில் செல்கிறார்!

என்ன தெரிகிறது? வதந்தி என்னும்போது, மூளை செயலற்று , ஆசைகளும் உணர்ச்சிகளும் அந்த செய்திக்கு அர்த்த வடிவம் கொடுக்கின்றன.  நேர் அர்த்தத்தில்  எந்த பரபரப்பும  இல்லை. இந்த வதந்திகளின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் புலம்பல்களை யார் கவனிக்கிறார்கள்  ?

செவ்வாய், 31 ஜூலை, 2012

BEWARE OF POLICE!!

"நீர் உடனே புறப்பட்டு  கீழே குறித்த இடங்களை 'விசிட்' செய்து,  அங்கே ஏதும் குற்றம்,மது, சூது , திருட்டு போன்றவை எதுவும் நடவாமல் பார்த்திருந்தும், வெளியே இருக்கும் கேடிகள் குற்றம் எதிலும் ஈடுபடாமல் பார்த்தும் , சாயங்காலம் 5 மணிக்கு ஸ்டேஷன் திரும்ப வேண்டியது".

"என்ன இது என்று யோசிக்கிறீர்களா?  நானே சொல்கிறேன். இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. இது ஒரு போலீஸ் 'கான்ஸ்டபில் 'பீட் செல்வதற்கு அவர் சார்ஜன்ட் அல்லது ஸ்டேஷன் ரைட்டர் அவர் வைத்திருக்கும் நோட் புத்தகத்தில் எழுதி கொடுத்து அனுப்பும் குறிப்பு. இந்த நோட் புக்குடன் அவர் எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்து , அங்கங்கே இருக்கும் முக்கியமானவர்களிடமிருந்து கைஎழுத்து பெற்று , ஸ்டேஷன் செல்வார். என் அலுவலகம விமான நிலையம் என்பதால் அங்கு வருவார். என்னிடம் தினம் கையெழுத்து வாங்கி செல்வார்.

ஒரு நாள், எனக்கு வேலை ஒன்றும் இல்லாத போது , இதை படித்து ஆச்சர்யமானேன். அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.

" ஆமாம் , நீங்கள் செல்லும் இந்த இடங்களில் ஏதேனும் குற்றம் நடந்தால் ஒரு ஆளாக என்ன செய்வீர்கள்?"

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க விட மாட்டோம் சார், எங்களுக்கு தெரியும், எவன் எப்போது என்ன செய்வான் என்று. அப்படி மீறி ஏதேனும் நடந்தால் கூட ஸ்டேஷனில் புகார் செய்து FIR போட்ட உடனே ஆக்க்ஷன் எடுப்போம்" என்றார்.

சரி, உங்களுக்கு மாதம் 'இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும்' என்று  இருக்கிறதா?

அது , ஆமாம் , இருக்கிறது. 'சந்தேக கேசில் எவனையாவது பிடித்து உள்ளே தள்ள வேண்டியதுதான்.

அது எப்படி செய்வீர்கள்?

"ரோந்து வரும் பொது அவன் பூட்டிய வீட்டின் வாசலில் பூட்டை உடைக்கும் தளவாடங்களோடு பதுங்கியிருந்தான். எங்களை (போலிசை)பார்த்த உடன்  ஓட முயற்சிக்கும் போது  பிடித்தோம் என்று கேஸ்  போட  வேண்டியதுதான் ."

சரி, எல்லாரும் உள்ளூர்காரங்களகதானே இருப்பார்கள்? எப்படி கேஸ் போடுவீர்கள்?

"ஊருக்கு புதிசாக எவனையாவது தள்ள வேண்டியதுதான்!"

" அது உங்களுக்கு எப்படி தெரியும்?

" அது ஒண்ணும் பிரச்னை இல்ல சார்- இந்த பஸ்ல டிக்கட் கிடைக்காம சில பேர் லாரியில் போவானுங்க... அவனை பிடித்து கேஸ் போட்டுற வேண்டியதுதான்.

" பாவம். என்ன urgent  வேலையோ போகிறான்- அவனை பிடித்து கேஸ் போடுகிறேன் என்கிறீர்களே?

" இதெல்லாம் பாத்தா  ஆகுமா  சார்?" என்றார்.

அவ்வளவுதானா- வேறு ஏதாவது கேஸ் உண்டா ?

."கஞ்ஜா வைத்திருந்தான் என்று கூட சமயத்தில் போடுடரதுதான் "

" கஞ்சாவுக்கு எங்கே போவீர்கள்?

பொட்டலம் எங்கிட்டேயே இருக்குமில்ல? என்று காவி பல்லை பெருமையோடு காட்டினார்,

சார், நான் கிளம்பறேன்- ஸ்டேஷனில்' accused  suspect' ஐ விசாரிக்க வேண்டி இருக்கிறது. என்றார்.

" எப்படி விஜாரிபீர்கள்? என்றேன் நான்.

மயில் இறகு போடுமா சார்? நக கணுவில் ஊசி ஏற்றி விசாரிப்போம் என்றார்.

இவர்கள் விசாரணை முறையில் மகாத்மா கூட திருடினேன் என்று ஒத்துக்கொண்டு விடுவார்!

காவல் துறை இந்த லட்சணத்தில் வேலை செய்தால் ஊர் எங்கிருந்து உருப்படும் என்று எண்ணினேன்.  

"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதியார் யாரைப் பற்றி பாடினார்?என்ற என் சந்தேகம் இன்று வரை தீர வில்லை.

IN THE NAME OF GOD!


வாழ்கையில் புகழோடு இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தாம் உயர்ந்தவர் அல்லது வேறுபட்டவர் என்று காண்பிக்க வேண்டுமென்ற அவாவில் செய்யும் அறிவற்ற செய்கைகளை பகுத்தறிவு என்ற பெயரில் செய்கிறார்கள். முதலில் பகுத்தறியும் தகுதி நம்மிடம் உள்ளதா? நம் அறிவு- வரை முறைக்கு உட்பட்டது. அதை தாண்டிய விஷயங்களை நம் அறிவால் பகுத்தறிய முடியாது. இதுதான் உண்மை. அரை அடி அளப்பானால் உலகை அளக்க முடியுமா? முடியும் என்று சொன்னால் அதன் சாத்தியகூறுகள் எவ்வளவு என்பதை முதலில் " பகுத்தறிவால்" உணர வேண்டும். நாம் சொல்வதை நம்பி நம்மை தலைவன் என்று தொடர ஒரு கூட்டத்தை உருவாக்கி நம் மூட நம்பிக்கைக்கு பகுத்தறிவு என்று பெயர் வைக்க கூடாது. முதலில் அனைத்தையும் அறியும் சக்தி நம்மிடம் இல்லை. நம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் 'புதையல் தேடல்' முறைதான். முதலில் எல்லாவற்றுக்கும் விடையும் முடிவும் காண வேண்டும் என்ற எண்ணமே தவறு. இதை விட கொடுமை இதை முதலில் பரப்பியவர்களின் நோக்கம். ஆரம்பத்தில் தனக்கென்று  ஒரு கூட்டமும்  அதற்கு ஒரு கொள்கையும்  வேண்டும். கூட்டத்துக்கு ஒரு இலக்கும் தன்னை தலைவனாக கொள்ளும் மனமும் வேண்டும்.  கூட்டம் உருவான பின் அவர்களின் பொது இலக்கு ' கடவுள் எதிர்ப்பு'. எப்படியும் கடவுள் மறுப்பு செய்தி வெளியிட  மாட்டார்  இதுதான்   பகுத்தறிவு.!

சரி, உருவற்ற ஒன்றிடம் எப்படி போராடுவது? ஆகவே அதன் அடையாள குறியாக கிடைத்தவர்கள் பார்பனர்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு  அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்தானா ? ' எல்லோரிடமும் இருக்கிறது. இது சரியா தவறா? இந்த எண்ணம் மானிட இயல்பு!!

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை.

இதன் தொடராக நாம்
" அதனினும் அரிது உயர் ஜாதியில் பிறத்தல் ; அனைத்தினும் அரிது "நானாய் பிறத்தல்'
எனும் தன்னுயர்வு கொண்டு திரிகிறோம். ஜாதியில் உயரவில்லை என்றால் படிப்பில் உயர்வு  அது இல்லாவிட்டால் பணத்தினில் உயர்வு, அதுவும் இல்லாவிட்டால் அழகினில் உயர்வு. எதுவும் இல்லை என்றால்  ".ஏரியா வுட்டு ஏரியா " . ஏதோ ஒரு விதத்தில் நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து உயர் உணர்வு கொள்வதில் நமக்கு மகிழ்ச்சி.

இந்த உணர்வை உபயோகித்து பார்பனர்  , பார்பனரல்லாதோர் என்று மக்களை  இரு விதமாக பிரித்து  கொள்கைக்கு கடவுள் எதிர்ப்பை முன் வைத்து , கடவுள் பிரதிநிதிகளாக பார்பனர்களும் அவர்களை எதிர்த்தல் பகுத்தறிவு கொள்கைக்கு இயைந்ததாகவும் ஏற்படுத்தினர் நம் 'தலைவர்கள்.. உண்மையில் அவர்கள் நோக்கம் அதுதான? வாழ்கையில் நம் தலைவர்கள்  நோக்கம் வசதி பணம் புகழ் , பல தலை முறைகளுக்கு சொத்து!!  நம் தலைவர்கள் நமக்கு செய்த நன்மைகள் அல்லது தீமைகள் அனைத்தையும்  இப்போதுள்ள தலைமுறை பெருமளவு  உணர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் கொள்கை வழி நடக்கிறார்களா? இல்லை  - தனக்கென்று தனி கொள்கை வைத்திருக்கிறார்கள்! " ஊருக்கு உபதேசமடி பெண்ணே உனக்கிலை! " என்னும் கதை இவர்களுக்குகாகத்தான்.

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு ; அச்சம் என்பது மடமையடா " என்பது ஊருக்கு உபதேசம்!  தனககென்றபோது " ஐயோ கொல்றாங்களே" !!"

இந்த தலைவர்களுக்கு உங்களிடம் வேண்டியது உங்கள் ஓட்டு மட்டும்தான். அதன் பின் செய்யவேண்டியது எல்லாம் 'பகுத்தறிவு வாதிகள்' வேலை. ' நீங்க பாத்துண்டு மட்டும் இருங்க" !

நம் நேரத்தை இவர்களுக்காக செலவு செய்ய வேண்டாம். நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் முன்னேற்ற பாதையிலே பயணம்.
இவர்கள் நம் முதுகு சுமைகள். இவர்கள் பேச்சை கேட்டுகொண்டிருந்தால் நாம் " தமிழ் நாட்டு தவளைகளாக " இருக்க வேண்டியதுதான். "குண்டு சட்டியில் அவர்களுக்கு நாம் குதிரை ஓட்ட வேண்டாம்."

கடவுள் என்னும் உருவற்ற சக்தியை உணர பகுத்தறிவு ஒரு தடைக்கல்!! அந்த உணர்வு நமக்கு வரும் போது  வரட்டும். நாம் அதை அப்போது தெரிந்து கொள்வோம்.

" கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர்!"

வெள்ளி, 27 ஜூலை, 2012

TAMIZHAR PANBAADU

முடிச்சூர் ரோடு பிரிட்ஜ் அடியில் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு  வேலை வெட்டி எதுவும் கிடையாது. ஆனால் மீதி ஜனங்களுக்கு அப்படி இல்லை. எல்லோரும் பிஸி ஆகத்தான் இருந்தார்கள். காலை 6 மணிக்கே களை கட்டி இருந்தது . அதுதான் நம்மூரின் சிறப்பியல்பு. நாலு பக்கமும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். பூரா சேறும் மண்ணும். போதாததற்கு மழை காரணமாக சாக்கடை நிரம்பி வழிந்து ரோடு எல்லாம் கருப்பு சேறு . ஜனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் கூட கிடையாது. 'what cannot be avoided has to be endured ' என்ற விரக்தி சித்தாந்தத்தில் , அப்படி இருக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அனைவரும் வேகமாக போய் கொண்டிருந்தார்கள். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு போர்டு - 'கன ரக லாரிகள் காலை 8 மணிக்கு மேல் இந்த வழிக்குள் வரக்கூடாது ' என்று. ஆனால் ஒரு போலீஸ் கான்ஸ்டபில் 6 மணிக்கெல்லாம் அங்கு ஆஜர் ஆகி இருந்தார். லாரிகள் அனைத்தும்  அவரை தாண்டி நிறுத்தி, தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டி சென்றனர்.


(மேலே இருக்கும் படங்கள் நான் சொன்ன இடத்தில எடுத்ததில்லை- ஒரு பானை சோற்றுக்கு என்னும் விளக்கத்தில் பாருங்கள்)
பிரிட்ஜ் கீழே இருந்த சுவர் பூரா போஸ்டர்கள் !. 'வீரன் ஆறுமுகத்துக்கு கண்ணீர் அஞ்சலி- நண்பர்கள் ( அவர்கள் பெயர் அனைத்தும் இனிஷியலுடன்); படப்பை அருகே மலிவு விலையில் மனை- " டாக்டர் அய்யா அழைக்கிறார்"                        ( இலங்கையில் தமிழர் கொடுமைக்கு காரணமான 'ராஜபக்சே வை எதிர்த்து (அல்லது -,லோக்கல் பிரச்னைகளில் யாரை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்று இன்னும் முடிவாகாததால்) ; 'தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்- "கௌன்சிலர் எலெக்க்ஷனில் வெற்றி பெற வாய்ப்பு கொடுத்த 'அம்மாவுக்கு நன்றி-நன்றி நன்றி-; -டாக்டர் விஜயகாந்த் அழைக்கிறார்- டாக்டர் கலைஞர் அழைக்கிறார்- கடல் அலையெனத் திரண்டு வாரீர்- தமிழ் இன மான தலைவர் தொல் திருமாவளவன் அழைக்கிறார்- பக்கத்தில் ஒரு சீறும் சிறுத்தை -' 'வருங்கால பிரதமரே என நேஹ்ருவின் நேர் வாரிசு ராகுல் காந்தி படம்-( பின்னால் மூன்று நான்கு வட்டகளில் - இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி படங்கள் ) முடிவே இல்லை!

இவர்கள் நமக்கு நிஜமாகவே என்ன செய்கிறார்கள்? அவர்கள் யாரும் நம்முடன் இல்லை எனபதை இவர்கள் எங்கிருந்தோ நம்மை அழைப்பதிலிருந்தே  தெரிகிறது. அது  இருக்கட்டும். அது என்ன 'கடல் அலை போல' திரண்டு வருவது? என்றோ ஒரு நாள் 'சுனாமி' போல் திரண்டு வந்து இந்த சுவரொட்டி அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தோன்றியது. அப்போது சைக்கிளில் சுவரோட்டிகளோடு ஒரு வாளி நிறைய பசையோடு ஒருவர் வந்து  இறங்கினார். ஒரே போஸ்டரின் காப்பிகளை  அந்த பிரிட்ஜ் சுவர் பூரா ஒட்டினார் . ஏற்கனவே இருந்த சுவரொட்டிகள் மேலே.! ஒரே போஸ்டரை  ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றாக ஒட்டுவதில் என்ன அர்த்தம்? பத்தோடு பதினொன்று- அத்தோடு இது  ஒன்று என போக கூடாது- ஜனங்களுக்கு வேறு வழியில்லாமல் இந்த போஸ்டரை தான் பார்த்து உணர வேண்டும் - என இருக்கலாம்

இவை அனைத்தையும் என்னை தவிர யாரும் பார்த்து கொண்டிருக்க வில்லை. கையில் பையுடன், அல்லது TVS பைக் பின்னால் அவர்கள் ஸ்கூல் குழந்தைகளுடனும், அவரவர்கள் வேலையே கண்ணாக போய் கொண்டிருந்தனர்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். ஒரு சின்ன கோயில் - மக்கள் நிறையவே இருந்தார்கள். ஒரு ரோடு கடை- இட்லி தோசை கடை- கடைக்காரம்மா முதல் ஈட்டில் எடுத்த இட்லிகளை காக்காய்க்கு கூரை மேல் வைத்தார்கள். நம்மூர் நம்மூர்தான்- எவ்வளவு வேண்டுமானாலும் கத்து." சொரணை கெட்ட தமிழன் ", "சோற்றால் அடித்த பிண்டம் "  "வாழை மட்டை"  இன்னும் மனதில் என்னென்னமோ கற்ற உன்  தூய தமிழில் 'துப்பு'!     ஆனால் நம் ஜனங்கள் மாற மாட்டார்கள்-நல்லவர்கள்-கோவில் போவார்கள்- மசூதி செல்வார்கள்- சர்ச் போவார்கள்.இரக்க உணர்சியோடுதான் இருப்பார்கள்.  தப்பு தவறு அங்கங்கே நடந்தாலும் உதவிக்கு நிச்சயமாக வருவார்கள்.(போலீஸ் தொந்தரவு இல்லாமல் இருந்தால்). 'தமிழர் யார் என்று நீங்கள் நிச்சயிக்க வேண்டாம். ராஜ ராஜ சோழன் விழா- எப்போது பிறந்தான்? தெரியாது - உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டன்  பெயர் என்ன? என்னவாக இருந்தார்? சத்தியமாக தெரியாது.'சுத்தமான தமிழை இன்னும் பேசும் சேர நாட்டவர் தமிழரா அல்லரா?
சொல்ல மாட்டீர்கள்... திராவிட நாட்டின் எல்லைகள் என்ன ? அது  குழப்பமான விஷயம் . தமிழ் பேசிய பாரதியாரை-ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பெரியவரை  தமிழரல்ல என்பீர்கள்! ராமன் ஆரியன் என்று புராணத்தில் படித்து விட்டு ராவணன் திராவிடன் என்பீர்கள்.ராமன் 'சோம ரசம் குடித்தாரா  அல்லது பூண்டு ரசம் குடித்தாரா என்னும் விவரத்தில் உங்கள் புலமையை காட்டுவீர்கள். ராவண லீலா கொண்டாடுவீர்கள். இராவணன் சிங்கள நாட்டினன்.. . அப்போது அங்கு இருக்கும் சிங்களவர் அனைவரும் திராவிடரா?"தொப்புள் கொடி உறவு " என்று பந்தம் கொண்டாடும் நீங்கள் அவர்கள் அவலத்தில் அரசியல் செய்வது உலகறிந்த உண்மை - அவர்களுக்கும்  நன்றாக தெரியும்... சொந்த வரலாறையே சுத்தமாக அறியாத   நீங்கள்' வந்தவர் 'வரலாற்றை பற்றி வாய் கிழிய பேச வந்து விடுவீர்கள்.  . தன்மான இனம் பிரித்து தமிழர் அடையாளம் காட்ட  தயங்காமல் வந்து  விடுவீர்கள்.

நம் ஜனங்கள் நல்லவர்கள். அவர்கள் கவலைகளையும்  கஷ்டங்களையும் நீங்கள் என்ன அறிவீர்கள்? அவர்கள் மலர் கிரீடம் தரித்திருக்கும் மன்னர்கள் இல்லை. 'கும்பி எரியுது குடல் கருகுது - உனக்கு "குளு குளு " கார்  ஒரு கேடா? என்று ஆட்சியில் இருந்தவரை விமரிசனம் செய்த  நீங்கள் '" பக்தவச்சலம் அண்ணாச்சி - பருப்பு விலை என்னாச்சி என்று பரிகசித்த நீங்கள்,  உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? 'பக்தவச்சலம் குரங்கே- பதவியை விட்டு இறங்கேன் ! என்று போஸ்டர் ஒட்டியவர்கள் நீங்கள். இதுதான் தமிழர் பண்பாடா? " பெரும் தலைவர்- வாழ்நாள் பூரா வாடகை வீட்டில் இருந்தவரை- " காமராஜர் முதுகு  தோலை  உரித்தால் இரண்டு டமாரம் பண்ணலாம் என்று விமரிசதவர் நீங்கள். " இதுதான் நம் பண்டைய கலாசார பண்பா?அடுத்தவரை குறை கூறினால் நீங்கள் உயர்ந்தவர் என்று அர்த்தம் கிடையாது.  நம் மக்களை நீங்கள்  தொந்தரவு செய்யாமல் விட்டாலே தமிழ் நாடு நிச்சயம்  முன்னே வரும். 'சிந்துபாத் மீது சவாரி செய்த கிழவன் போல் அவர்கள் முதுகில் நீங்கள் சவாரி செய்யாமல் இருந்தாலே  அவர்கள் எதிர் காலம் நன்றாக இருக்கும். கால் பிடித்து இழுக்கும் சுயநல தவளைகளாக நீங்கள் இருப்பதால்தான் அவர்கள் முன்னேற்றம்  தடை படுகிறது..

அவர்களை வாழ விடுங்கள்; .

KURANGU BASKAR !!

குரங்கு பாஸ்கர் HDFC  பேங்க்  அருகில் (ஒரு மரத்தடியில்) நின்று கொண்டிருந்தான். ஏதோ பாங்கில் அக்கௌண்டில் பணம் போடவோ எடுக்கவோ நின்றிருந்தான் என எண்ணாதீர்கள் . தன்னுடைய 'இரை 'க்காக காத்திருந்தான். அவன் குறி எப்போதும் தப்பியதே இலலை . குரங்கு என்று அவனுக்கு காரணப்பெயர் போலீஸ் காரர்கள் அன்புடன் வைத்திருந்தனர். கையில் வைத்திருக்கும் பணப்பையை குரங்கின் லாவகத்துடனும் வேகத்துடனும் பிடுங்கிக்கொண்டு ஓடினானாகில் அவனை பிடிக்க இன்னொரு குரங்குதான் வர வேண்டும். பறி கொடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் முன்னே குரங்கு பாஸ்கர் மறைந்து விடுவான். அவனுக்கும் போதாத காலங்களில் மாட்டிகொண்ட போது தர்ம அடி வாங்கிக்கொண்டு போலிசிடம் பிடி பட்டிருக்கிறான். அவனுக்கும் இப்போது வயசாகிறது. ஒரு தடவை போலீஸ் கேஸ் ஆகி ஜெயிலுக்கு போய் விட்டால் மறுபடியும் போவதற்கு தப்பு செய்ய வேண்டும் என்ற அவசியமே நம்மூரில் இல்லை. தீராத திருட்டு கேஸ்களை இவனை மாதிரி ஆஸ்தான கேடிகள் மீது சுமத்தி போலீஸ் அவ்வப்போது இவனை ஜெயில் விருந்தாளி ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் குரங்கு பாஸ்கர் பயப்படுவதே இல்லை. அவனே சமயத்தில் அவர்களை தன மேல் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளும்படி கேட்டு கொள்வான். அதற்கு அவனுக்கு காசு கூட கிடைக்கும்!    அப்புறம் 'போலீசுக்குஆதரவாக ' பொய் சாட்சி சொல்லி காசு பண்ணுவான்.'தொழில்  ரகசியங்களையும் ஜெயிலில் சக கேடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். ஜெயில் பல சமயங்களில் 'vocational training college 'ஆகத்தானே நடக்கிறது? அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் அவர்கள் வெளியே வரும்போது இரண்டு விரல்களை உயர்த்தி 'V '( எனக்கு 'வெட்கம் இல்லை என்பதின் அடையாளமாக!) காண்பித்து ' தொண்டர்களுடன் ' செல்வார்கள். பாவம், குரங்கு பாஸ்கருக்கு அந்த  மாதிரியெல்லாம் அந்தஸ்தும் இல்லை- ஆட்களும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை.சரி, நம் கதைக்கு விட்ட இடத்திலே வருவோம்.


பணத்தை பறி கொடுக்கவென்றே சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பாங்கிலிருந்து பணத்தை 'மஞ்சள் பையில் 'தான் வைத்து எடுத்து செல்வார்கள்.ஏன் என்று கேட்காதீர்கள். தமிழர் பண்பாடோ என்னமோ தெரியாது. நம் குரங்கின் குறியெல்லாம் அவர்கள்தான். இவனுக்கேன்றே பணம் 'withdraw ' செய்து இவனிடம் கொடுக்க வந்தாற்போல் நடந்து கொள்வார்கள் . சரியான் 'வசூல்' நாட்களில் குரங்கு பாஸ்கர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு  'தொழில்' செய்ய வேண்டிய வேலையே இருக்காது. அந்த நாட்களிலெல்லாம் 'வோட்காவ'  ஊத்திகினு ஓடியாடி' பாடுவான் . 


இன்று 'புதன்' கிழமை. குரங்கு பாஸ்கருக்கும் இன்றுதான் நல்ல நாள். மாதத்தின் முதல் வார புதன் கிழமை விசேஷமான நல்ல நாள். 'மஞ்சள் மகிமைக்காக' காத்திருந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை. ஒரு வயதானவர் 'மஞ்சள் பையுடன்' பாங்கிலிருந்து வெளிப்பட்டார். அவர் வெளியே வந்து தன் தோளில் போட்டிருந்த துண்டால் முகம் துடைக்க முற்படுகையில் 'மஞ்சள் பை' கை மாற குரங்கு பக்கத்து சந்து வழியாக ஓடி மறைந்தான். 'பை' கொஞ்சம் கனமாக இருந்தது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ் ஏறி மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு டிக்கெட் வாங்கினான். 'அப்பாடி ' இன்று நல்ல வேட்டைதான். ஆண்டவன் புண்ணியத்தில் மகத்தான மகசூல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.


மெதுவாக பையினுள் கையை விட்டு நுழைத்து பார்த்ததில் மூன்று கட்டு கரென்சி இருந்ததை உணர்ந்தான். 'எவ்வளோ காசு, பேசாம ஒரு கடை வைத்து விடலாம்' - அப்படியே படிப் படியாக முன்னேறி அரசியல்' செய்து' ஒரு நல்ல 'பொசிஷன் ' வந்து  விட்டால்  பின்னர் குரங்கு அடை மொழியை விடுத்து , 'டாக்டர பாஸ்கர் ' என தொண்டர்களை விட்டு கூப்பிட சொல்லலாம். " டாக்டர் அழைக்கிறார் - அலை கடலென திரண்டு வாரீர்! என்று போஸ்டர் ஒட்டும் நாளை எண்ணி கனவு  கொண்டிருக்கும்போது  மெயின் பஸ் ஸ்டான்ட் வந்து  விட்டது. கனவுகளோடு இறங்கிய குரங்கு பாஸ்கருக்கு போதாத காலம் போலீஸ் உருவில் கீழே காத்திருந்தது . " இதோ பாரு 307, கும்பிடப்போன  குரங்கு குறுக்கே வந்திருக்கு பார் - வாடா , உன்னை எங்கெல்லாம் தேடுறது , வா போலாம்' என்றார் 347. 'சார், நான் வீடு வரைக்கும் போய் விட்டு வருகிறேன்- அர்ஜென்ட் வேலை இருக்கிறது- என்று நழுவப்பார்த்த கு.பாஸ்கரை அவர்கள் விடுவதாயில்லை. 'அதெல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம்- கோர்ட்டுக்கு இப்போது போக வேண்டும்- ஒரு முக்கியமான கேசில் நீ நம்ம லோக்கல் தலைவருக்கு (தாதா) பதிலாக உள்ளே போக வேண்டும்- அவருக்கு கவுன்சிலர் எலெக்சன் வேலை இருக்கிறதாம்! என்றார் 307. போச்சுடா சாமி எல்லாம் என்று தன 'ஜாதகத்தை' நொந்து கொண்டு கு.பாஸ்கர் போலீஸ்காரர்கள் பின் சென்றான். 10 நிமிஷ வேக நடைக்கு பின் மூவரும்  போலீஸ் ஸ்டேஷன் சென்றடைந்தனர் .


'என்ன கிடைச்சுட்டானா - வாடா குரங்கு, உன்னையெல்லாம் போய் தேடி பிடிக்க வேண்டியதாகி விட்டது பார்-' என்று வரவேற்றார்- ரைட்டர். "சட்டை பான்ட் எல்லாம் கயட்டி வைத்துவிட்டு உள்ளே போ- அது என்ன பையில் ?-பாரு 307?  சார் ரைட்டர் சார், இவன் பையில் 3 கட்டு 500ரூ இருக்கிறது சார்- எங்கோ அடித்திருக்கிறான்- என்றார் 307-"  " அடி வயிற்றில் ஒரே சமயத்தில் ஐஸையும் நெருப்பையும் ஒன்றாக உணர்ந்தான். குரங்கு பாஸ்கர். -" சரி சரி நல்லதா போச்சு - காசையும்  கொடுத்து கேசையும்  ஒத்துகிட்டு-  பார் உள்ளே போறான் பார் - என் நண்பேன் 'என்று தொடை தட்டி  சிரித்தார் ரைட்டர் .


" பிச்சை எடுத்தாராம் பெருமாள் - அதை புடுங்கிண்டாராம் இந்த அனுமார்"!! என்று சொல்லி ஆரவாரமாக சிரித்தார் 307. அதை வழி மொழிந்து  பின்சிரிப்பு செய்தார் 347. 


பெருமாள் யார் இதில் அனுமார் யார் என்று புரியாத  குரங்குக்கு தாங்க முடியவில்லை . " அந்த பழமொழி சொன்ன காலத்தில் போலீஸ் இல்லை  " என்றான். " என்னடா முனகல் ? இன்ஸ்பெக்டர் வரார் இப்போது- கோர்டுக்கு நேரமாச்சு " போடா  உள்ள "  'என்று அவனை நெட்டி உள்ளே தள்ளினார் 347.  



வியாழன், 26 ஜூலை, 2012

SEA IS FULL OF FISH !!

"கிட்டாதாயின் வெட்டென மற "  என்கிறது நமது தமிழ் பழ மொழி.
" If You love something , set  it free , if it comes back ,its yours , if not, it was never yours from the beginning " என்கிறார்  Rachel Thompson .


என் விஷயத்தில் இந்த அறிவுரையின் தேவை எதுவுமில்லாமலே நான் இருந்தேன்.என் இள வயதில்  நான் காதலித்த பெண்ணை  என் ப்ரெண்டும் காதலித்தான் .  என்னிடமே அவளை எப்படி 'பட்டாய்கலாம் ' என அட்வைஸ் வேறே கேட்பான். என் மற்ற பிரெண்ட்ஸ் என்னிடம் " உனக்கு மூளை இருக்கிறதா ? அவனை ரெண்டு போடாமல் அவனுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறாயே " என்பார்கள். என் பதில் ஒன்றுதான் . " எனக்கு இருக்கும் உரிமை அவள் கல்யாணம் ஆகும் வரை அவனுக்கும் உண்டு. அவளுக்கு என்னிடம்  விருப்பம் இருந்தால் அவன் என்ன செய்ய முடியும். அப்படி அவளுக்கு அவனிடம் அல்லது வேறு யாரிடமோ விருப்பம் ஏற்பட்டால் அது இப்போதே நடக்கட்டும். " என்பேன்.

எங்கள் அலுவலகத்தில் எங்கள் சீனியர் கிளேர்க் இருந்தார்.  . இவன்; அவரிடம் சென்று தனக்கு உதவி செய்ய கேட்டான். விவரம் தெரியாத அவரும் அவள் இருந்த ஆபீஸ் வரை சென்று விட்டு ( ஒன்றும் கேட்காமலேயே) வந்தார். இவனுக்கு ஒரே ஆர்வம். " என்ன சொன்னாள் சார் ?" என்று ஆவலுடன் கேட்டான். " முதலில் கையை கொடு, என்று குலுக்கி விட்டு , " உன்னை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் , ஆனால்  நீ சிகரெட் பிடிப்பதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை" என்றார். எனக்கு ஒரே ஷாக்; இருந்தாலும் மேலே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. சரி, இதை இப்போதே செலேப்ரெட் செய்ய வேண்டும் என்றான் . நான் அவள் இருந்த ஆபீஸ் சென்று அவளிடம் இதை கேட்ட போது அவளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. " இந்த கூத்தை நீங்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்தீர்கள; உங்களுக்கே என் மேல் அன்பு இல்லை  என்று என்மேல்  எரிந்து விழுந்தாள் .

பெண்களுக்கே உரித்தான் அர்த்தமில்லாத சந்தேகத்தில் அவள் என்னிடமிருந்து பின்னர் விலகினாள் . நான் ஒரு காதலியிடம் காட்ட வேண்டிய அளவு அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை என அவள் எண்ணி இருக்கலாம்.  ஆனால் பெரும்பாலான பெண்கள் புகழ்ச்சி வார்த்தைகளுக்குத்தான் நம்பிக்கை வைப்பார்கள் என எனக்கு அப்போது தெரியாது. இப்போதும் புரியவில்லை.தெரிந்திருந்தாலும்  என் இயறகையான குணம் யார் பின்னாலும் போவதல்ல . போகட்டும், நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு வருடம் கழித்து அவள் என் பிரெண்டையே கல்யாணம் செய்தாள் . முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . பின்னர் இதனால் ஏற்பட்ட வலியை மறந்து விட்டேன். இதை படிப்பவர்கள் என்னை பற்றி என்ன எண்ணுவார்கள் என்பதையும் இப்போது நான் யோசிக்கவில்லை . நான் சொல்ல வந்தது எப்படி காதலிக்க வேண்டும் என்பதல்ல. நம்மை ஒருவர் ஒதுக்கி வேண்டாம் என்பதை கூட சொல்ல தேவை இல்லை ; போடா போடா புண்ணாக்கு என்று நடத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.


தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற் பயிற்சி செய்ய செல்வேன். அதை காலை 4 மணிக்கு மாற்றினேன். வேலை இடம் மாறுதல் செய்தேன். எனக்கு பிடித்தமான விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினேன். அவளை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் ஆக்கி கொண்டேன். விரைவில் அந்த உறவின் வலியை மறந்தேன் . 


கடவுள் ஒருவரை தவிர்த்து யாரும் நம்மிடம் 100% அன்பு காண்பிக்க மாட்டார்கள் ; நாம் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையும் அன்பும் வைத்து ஏன் அடி வாங்க வேண்டும். ஒரு முறை என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது , என் நண்பன் அவன் காலேஜ் ப்ரொபசர் " பிள்ளைங்களை  நம்பாதீங்கடா - விளக்கு காட்டி கூட்டிகிட்டு   போய்  குளியில் ( குழியில் ) தள்ளிடுவாங்க " என்றார் என்று சொல்லி சிரித்தான் . கூட இருந்த பெண் நண்பி " தள்ளுவதோடு நிறுத்தமாட்டோம்  " அவள் பாவம் அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்- நான்தான் குழியில் குதித்தேன் " என்று சொல்ல வைப்போம்"  என்றாள்!! 


உண்மையில் நம் மேல் உண்மையான  அன்பு இல்லாதவர்கள் , ( ஆண்/பெண்)  நம் வலியில் அவர்களின் வலிமையைதான் உணர்வார்கள். அவர்கள் மகிழ்ச்சிக்கு நாம் தீனி போடுவது தேவை இல்லாத வேலை. ' என் வழி தனீ வழி " என்று செயல் முறையில் காண்பிப்பது அவசியம். நம்மையே யாருக்கும் படையல் ஆக்க வேண்டிய தேவை இல்லை. 'சமுத்ரம் முழுக்க மீன்கள்! 


புரிந்ததா?