அண்மையில் ஒரு ருசிகரமான செய்தி படித்தேன். ஊருக்கு பொதுவான கிணறு ஒன்றில் இரண்டு ௫௦௦500 காசு தாள்கள் மிதந்து கொண்டிருப்பதை கிராம மக்களில் யாரோ பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து காண்பித்தாராம் . உடனே நம்மூர் கலாச்சாரப்படி அவரவர் தனக்கு தோன்றியதை வதந்தியாக பரப்பினர். சிபிஐ ரைடுக்கு பயந்து யாரோ ஒரு பெரும் பணக்காரர் பாலிதீன் மூட்டையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து கிணற்றில் கொண்டுவந்து வீசி விட்டு சென்றதாகவும் , (பின்னர் எடுத்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில்!) அது கொண்டு வரப்பட்ட காரை பார்த்ததாகவும் சொல்ல, நம் கிராம மக்கள் உடனேயே செயல் வீரர்களாகினர்!!
நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று உடனேயே செயல் படுத்தப்பட்டு; கிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரும்
' மூட்டை ' கண் படாததால் , தூர் வாரி , சேறு மண் வெளியேற்றப்பட்டது. அப்போதும் மூட்டை கண்படவில்லை. ஏமாற்றமடைந்த மக்கள் " அப்போதே நினைத்தேன் " போன்ற வசனங்களை உதிர்த்து விட்டு, நீர் இறைக்கவும், தூர் வாரவும் ஆனா செலவை பொது செலவாக்கி சென்றனர்.
எது எப்படியோ , சுத்தம் செய்யப்படாத ஊர் கிணறு சுத்தமானது.!
இந்த வதந்தி இல்லாவிட்டால், யார் அந்த கிணறை கவனிக்க போகிறார்கள்?
இதன் பின்புல ஆராய்ச்சியாக , மக்களின் நம்பிக்கை பொதுவாக இயற்கையை ஒட்டியதாக இல்லாமல், "பர பரப்பான" கற்பனைகளை ஒட்டியதாகவே இருக்கிறது. இதை பயன் படுத்திதான் நம் செய்தி தாள்கள் ( அனைத்தும் அல்ல- ) பிழைப்பு நடத்துகின்றன!
ஒரு சமயம் பரபரப்பு செய்தி ஒன்று- " ராஜா ஜிக்கி" கல்யாணம். ! சரியாக பார்க்காத மக்கள் ஆர்வத்துடன் செய்தி தாளை வாங்கி பார்த்தால், பின்னணி பாடகர்கள் " திரு ராஜா அவர்களும் , செல்வி ஜிக்கி அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்!
" பிரதமர் இந்திரா ஜட்டியுடன் பறந்தார்!! இது என்னடா கொடுமையாக இருக்கிறதே என்று பார்த்தால், பிரதமர் இந்திரா , உதவி ஜனாதிபதி திரு ஜட்டி உடன் விமானத்தில் செல்கிறார்!
என்ன தெரிகிறது? வதந்தி என்னும்போது, மூளை செயலற்று , ஆசைகளும் உணர்ச்சிகளும் அந்த செய்திக்கு அர்த்த வடிவம் கொடுக்கின்றன. நேர் அர்த்தத்தில் எந்த பரபரப்பும இல்லை. இந்த வதந்திகளின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் புலம்பல்களை யார் கவனிக்கிறார்கள் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக