"நீர் உடனே புறப்பட்டு கீழே குறித்த இடங்களை 'விசிட்' செய்து, அங்கே ஏதும் குற்றம்,மது, சூது , திருட்டு போன்றவை எதுவும் நடவாமல் பார்த்திருந்தும், வெளியே இருக்கும் கேடிகள் குற்றம் எதிலும் ஈடுபடாமல் பார்த்தும் , சாயங்காலம் 5 மணிக்கு ஸ்டேஷன் திரும்ப வேண்டியது".
"என்ன இது என்று யோசிக்கிறீர்களா? நானே சொல்கிறேன். இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. இது ஒரு போலீஸ் 'கான்ஸ்டபில் 'பீட் செல்வதற்கு அவர் சார்ஜன்ட் அல்லது ஸ்டேஷன் ரைட்டர் அவர் வைத்திருக்கும் நோட் புத்தகத்தில் எழுதி கொடுத்து அனுப்பும் குறிப்பு. இந்த நோட் புக்குடன் அவர் எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்து , அங்கங்கே இருக்கும் முக்கியமானவர்களிடமிருந்து கைஎழுத்து பெற்று , ஸ்டேஷன் செல்வார். என் அலுவலகம விமான நிலையம் என்பதால் அங்கு வருவார். என்னிடம் தினம் கையெழுத்து வாங்கி செல்வார்.
ஒரு நாள், எனக்கு வேலை ஒன்றும் இல்லாத போது , இதை படித்து ஆச்சர்யமானேன். அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.
" ஆமாம் , நீங்கள் செல்லும் இந்த இடங்களில் ஏதேனும் குற்றம் நடந்தால் ஒரு ஆளாக என்ன செய்வீர்கள்?"
"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க விட மாட்டோம் சார், எங்களுக்கு தெரியும், எவன் எப்போது என்ன செய்வான் என்று. அப்படி மீறி ஏதேனும் நடந்தால் கூட ஸ்டேஷனில் புகார் செய்து FIR போட்ட உடனே ஆக்க்ஷன் எடுப்போம்" என்றார்.
சரி, உங்களுக்கு மாதம் 'இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும்' என்று இருக்கிறதா?
அது , ஆமாம் , இருக்கிறது. 'சந்தேக கேசில் எவனையாவது பிடித்து உள்ளே தள்ள வேண்டியதுதான்.
அது எப்படி செய்வீர்கள்?
"ரோந்து வரும் பொது அவன் பூட்டிய வீட்டின் வாசலில் பூட்டை உடைக்கும் தளவாடங்களோடு பதுங்கியிருந்தான். எங்களை (போலிசை)பார்த்த உடன் ஓட முயற்சிக்கும் போது பிடித்தோம் என்று கேஸ் போட வேண்டியதுதான் ."
சரி, எல்லாரும் உள்ளூர்காரங்களகதானே இருப்பார்கள்? எப்படி கேஸ் போடுவீர்கள்?
"ஊருக்கு புதிசாக எவனையாவது தள்ள வேண்டியதுதான்!"
" அது உங்களுக்கு எப்படி தெரியும்?
" அது ஒண்ணும் பிரச்னை இல்ல சார்- இந்த பஸ்ல டிக்கட் கிடைக்காம சில பேர் லாரியில் போவானுங்க... அவனை பிடித்து கேஸ் போட்டுற வேண்டியதுதான்.
" பாவம். என்ன urgent வேலையோ போகிறான்- அவனை பிடித்து கேஸ் போடுகிறேன் என்கிறீர்களே?
" இதெல்லாம் பாத்தா ஆகுமா சார்?" என்றார்.
அவ்வளவுதானா- வேறு ஏதாவது கேஸ் உண்டா ?
."கஞ்ஜா வைத்திருந்தான் என்று கூட சமயத்தில் போடுடரதுதான் "
" கஞ்சாவுக்கு எங்கே போவீர்கள்?
பொட்டலம் எங்கிட்டேயே இருக்குமில்ல? என்று காவி பல்லை பெருமையோடு காட்டினார்,
சார், நான் கிளம்பறேன்- ஸ்டேஷனில்' accused suspect' ஐ விசாரிக்க வேண்டி இருக்கிறது. என்றார்.
" எப்படி விஜாரிபீர்கள்? என்றேன் நான்.
மயில் இறகு போடுமா சார்? நக கணுவில் ஊசி ஏற்றி விசாரிப்போம் என்றார்.
இவர்கள் விசாரணை முறையில் மகாத்மா கூட திருடினேன் என்று ஒத்துக்கொண்டு விடுவார்!
காவல் துறை இந்த லட்சணத்தில் வேலை செய்தால் ஊர் எங்கிருந்து உருப்படும் என்று எண்ணினேன்.
"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதியார் யாரைப் பற்றி பாடினார்?என்ற என் சந்தேகம் இன்று வரை தீர வில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக