வீடு பளிச்சென்றும் எப்போதும் சுத்தமாகவும் , வீட்டினுள் இருக்கும் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கவேண்டும் எனவும் ஒரு கொலை வெறியோடு இருந்தவர் என் பெரிய அண்ணன் அவர்கள். வீட்டில் படுத்த பாய் , ஜமக்காளம் , தலையணை அனைத்தும் அடுக்கி வைப்பது கூட எதன் மேல் எது வைக்க வேண்டும் என்பதில் ஒரு ஒழுங்கும் அதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்றும் ஒரு எழுதாத சட்டம். உண்டு.. பென்சில் ஊக்கோடுதான் இருத்தல் வேண்டும். ரீபில் இல்லாத பேனா பார்த்தாரானால் வெளியே எறிந்து விடுவார். வீட்டுக்கு வாங்க வேண்டிய மளிகை லிஸ்ட் கிட்சேன் சுவரில் ஒட்டி வைத்திருப்பார். அதன் படித்தான் வாங்க வேண்டும். அதிசயமாக அவர் வீட்டில் அவர் நினைத்த படி நடந்தது.
நானும் அவரை என் முன்னோடியாக கொண்டு என் வீட்டில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிதேன். ஒன்றும் நடக்க வில்லை. என் வீட்டுக்கு யார் வந்தாலும் , எங்கு உட்கார வேண்டும் என்று யோசித்துதான் உட்கார வேண்டும். சோபா மேல் ஒரு Air Bag . ஒரு pant shirt , காபி டம்பளர் , இன்னும் என்னென்னமோ இருக்கும். மீதி இடங்களும் அப்படிதான். டேபிள் மேல் ஜாடி,( மூடி இல்லாமல்), நியூஸ் பேப்பர் , டூத் பேஸ்ட் , இப்படி நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் இருக்கும். எது வேண்டுமானாலும் அரை மணி தேடி, அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும். நம் தேடிய பொருள் எங்கே என்று கேட்டோமேயாகில் " அங்கேதானே இருந்தது " என பதில் வரும். இந்த நிலைமையை மாற்ற நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சண்டையில் வந்து முடியும்.
என் அண்ணன் என் வீட்டுக்கு வந்து இந்த நிலைமையை ஒரு முறை பார்த்தார்.
சரி, நானே எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறேன் என்று செய்தார். அடுத்த நாள் பழைய கதைதான். வெறுத்து விட்டார்.
குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வார். என் பையனுக்கு அவர் சொன்ன கதை.
ஒருவன் ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்தான். ஏரியில் ஏதோ ஒரு பாட்டில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்து பார்த்த போது அதன் உள் வெள்ளையாக எதோ உருவம் இருப்பதை பார்த்தான். அந்த உருவம் அவனோடு பேசிற்று. என்னை வெளியே விடு. உனக்கு நான் அடிமையாக இருக்கிறேன் என்றது. விவரம் தெரியாத அவனும் அதை வெளியே விட்டு விட்டான். வெளியே வந்த அது ஒரு பூதம்! பயங்கரமாக வளர்ந்து நின்றது. " எஜமான் ! எனக்கு வேலைக்கு ஆணை இடுங்கள்; செய்கிறேன். வேலை கொடுக்க முடியா விட்டால் உங்களை விழுங்கி விடுவேன்" என்றது.
வேலைதானே , சரி, காலி மனை ஒன்றை காட்டி இதில் ஒரு மாளிகை கட்டு என்றான். ஐந்து நிமிடங்களில் வேலை முடிந்தது. பர பரப்புடன் அவனுக்கு தெரிந்த வேலைகள் அனைத்தும கொடுத்தான். மீண்டும் மீண்டும் பூதம் வந்து சேர்ந்தது. பயந்து போன அவன் தன குருவிடம் ஓடினான். பூதமும் பின்னே சென்றது. குரு சொன்னார், ' பயப்படாதே, வேலையை என்னிடம் கேட்டுக்கொள்ள சொல்" என்றார். அவனும் அவ்விதமே செய்தான்.
குரு பூதத்திடம் என் வீடு அட்ரஸ் கொடுத்து , வீட்டை கிளீன் செய்து , எல்லாவற்றையும் அததன் இடத்தில எடுத்து வைத்து விட்டு வா" என்றார்.
"சரி" என்று சென்ற பூதம் வரவேயில்லை. அவன் என் வீட்டிற்கே வந்து சேர்ந்தான்.
வீட்டிற்குள் பூதம் மயங்கி விழுந்திருந்தது , வீடு முன்னிருந்த மாதிரிதான் இருந்தது. மனமிரங்கிய அவன் பூதத்துக்கு மயக்கம் தெளிவித்தான். எழுந்திருந்த பூதம் அவன் காலில் விழுந்து புரண்டு மன்றாடி கெஞ்சியது. " எஜமான், நீங்கள் கொடுத்த வேலையை செய்ய என்னால் முடியாது. என்னை பாட்டில் உள்ளேயே விட்டு விடுங்கள். நான் பிழைத்து போகிறேன் என்றது. அவனும் மகிழ்சிய்டன் பூதத்தை பாட்டில் உள்ளே விட்டு ஏரியில் எறிந்து விட்டான்.
" இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்று கேட்ட என் அண்ணனிடம் " உங்கள் நேரம் சரியில்லை என்று தெரிகிறது" என்றான் என் மகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக