Kaun Banega Karodpathi யின் மறு பதிப்பாக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவி யில் ஆரம்பித்த போது அதன் வெற்றியில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது . அமிதாப் பச்ச்ஹன் நடத்திய ஒரு நிகழ்ச்சியை சூர்யா எட்டி தொடுவாரா என எண்ணினேன். எனது அபிப்ராயத்தின் தவறை எவ்வளவு மகிழ்ச்சியுடன் உணர்கிறேன் என்பதற்கு எனது வெளிப்பாட்டில் வார்த்தைகள் இல்லை. அடடா , அவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களிலும் கிடைக்காத ஒரு கௌரவமும் பெருமையும் அவருக்கு இதன் மூலம் வந்துள்ளது. அவர் கண்களில் தெரியும் ஓர் கருணையும் அன்பும் கண்டிப்பாக ஒரு நடிகரின் வெளிப்பாடு இல்லை.வீடியோ கிளிப் டைரக்டர் மற்றும் கலைஞர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து புகழ்ந்த விதம் மிகவும் உயர்வாக இருந்தது . எவ்வளவு பெரிய மனிதர் இவர்? இவரை மகனாக அடைந்த சிவகுமார் தம்பதியினர் கொடுத்து வைத்தவர் என்றால் இந்த நூற்றாண்டின் கொடுத்து வாய்த்த மனைவி ஜோ என்பதில் இரண்டாம் கருத்து கிடையாது.
ஒரு பொழுது போக்கும் நிகழ்சியை மானிட நேய நிகழ்ச்சியாக மாற்றி அமைத்துள்ளார். எவரையும் புண் படுத்தும் வார்த்தைகள் கிடையாது. தற்புகழ்ச்சியின் வெளிப்பாடு வார்த்தையிலும் இல்லை; முக வெளிப்பாடுகளிலும் இல்லை.. நடிப்பே இல்லை. பேசுபவர்களை தன்னுடன் அழைத்து செல்லும் இவர் பாங்கு ஒரு தலைவனுக்கே உரித்தானது. எனக்கு ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். எவ்வளவு பணம் , பதவி, பெருமை இருந்தாலும் அதோடு ஒட்டாமல் ஒரு சன்யாசியின் பண்போடு இருக்கும் அவரின் இயல்பு மிகவும் பிடிக்கும். அவர் வழி தனீ வழி! ஆனால் சூர்யா வேறு விதம்.
எனக்கு 65 வயது. எனக்கு பிடித்த கடவுள் சூர்யன். என் இரண்டு பேரன்களின் பெயர் சூர்யநாராயணன் , ஆதித்ய நாராயணன். இதனால்தான் எனக்கு சூர்யா பிடித்தது என்று நினைககதீர்கள். சூர்யா எனக்கு அவர் பொருட்டே மரியாதைக்குரியவர் .
விஜய் டிவி கொடுத்து வாய்த்த டிவி சேனல். என் கருத்துகளை படிக்கும் எவரும் இதில் தவறு காண மாட்டார்கள். நடிகர்கள் என்றல் எதோ பொழுது போக்கும் கலைஞர்கள் என்றும் நினைக்கும் பலருக்கும் சூர்யா இருள் போக்கும் ஒளி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக