வாழ்கையில் புகழோடு இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தாம் உயர்ந்தவர் அல்லது வேறுபட்டவர் என்று காண்பிக்க வேண்டுமென்ற அவாவில் செய்யும் அறிவற்ற செய்கைகளை பகுத்தறிவு என்ற பெயரில் செய்கிறார்கள். முதலில் பகுத்தறியும் தகுதி நம்மிடம் உள்ளதா? நம் அறிவு- வரை முறைக்கு உட்பட்டது. அதை தாண்டிய விஷயங்களை நம் அறிவால் பகுத்தறிய முடியாது. இதுதான் உண்மை. அரை அடி அளப்பானால் உலகை அளக்க முடியுமா? முடியும் என்று சொன்னால் அதன் சாத்தியகூறுகள் எவ்வளவு என்பதை முதலில் " பகுத்தறிவால்" உணர வேண்டும். நாம் சொல்வதை நம்பி நம்மை தலைவன் என்று தொடர ஒரு கூட்டத்தை உருவாக்கி நம் மூட நம்பிக்கைக்கு பகுத்தறிவு என்று பெயர் வைக்க கூடாது. முதலில் அனைத்தையும் அறியும் சக்தி நம்மிடம் இல்லை. நம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் 'புதையல் தேடல்' முறைதான். முதலில் எல்லாவற்றுக்கும் விடையும் முடிவும் காண வேண்டும் என்ற எண்ணமே தவறு. இதை விட கொடுமை இதை முதலில் பரப்பியவர்களின் நோக்கம். ஆரம்பத்தில் தனக்கென்று ஒரு கூட்டமும் அதற்கு ஒரு கொள்கையும் வேண்டும். கூட்டத்துக்கு ஒரு இலக்கும் தன்னை தலைவனாக கொள்ளும் மனமும் வேண்டும். கூட்டம் உருவான பின் அவர்களின் பொது இலக்கு ' கடவுள் எதிர்ப்பு'. எப்படியும் கடவுள் மறுப்பு செய்தி வெளியிட மாட்டார் இதுதான் பகுத்தறிவு.!
சரி, உருவற்ற ஒன்றிடம் எப்படி போராடுவது? ஆகவே அதன் அடையாள குறியாக கிடைத்தவர்கள் பார்பனர்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்தானா ? ' எல்லோரிடமும் இருக்கிறது. இது சரியா தவறா? இந்த எண்ணம் மானிட இயல்பு!!
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை.
இதன் தொடராக நாம்
" அதனினும் அரிது உயர் ஜாதியில் பிறத்தல் ; அனைத்தினும் அரிது "நானாய் பிறத்தல்'
எனும் தன்னுயர்வு கொண்டு திரிகிறோம். ஜாதியில் உயரவில்லை என்றால் படிப்பில் உயர்வு அது இல்லாவிட்டால் பணத்தினில் உயர்வு, அதுவும் இல்லாவிட்டால் அழகினில் உயர்வு. எதுவும் இல்லை என்றால் ".ஏரியா வுட்டு ஏரியா " . ஏதோ ஒரு விதத்தில் நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து உயர் உணர்வு கொள்வதில் நமக்கு மகிழ்ச்சி.
இந்த உணர்வை உபயோகித்து பார்பனர் , பார்பனரல்லாதோர் என்று மக்களை இரு விதமாக பிரித்து கொள்கைக்கு கடவுள் எதிர்ப்பை முன் வைத்து , கடவுள் பிரதிநிதிகளாக பார்பனர்களும் அவர்களை எதிர்த்தல் பகுத்தறிவு கொள்கைக்கு இயைந்ததாகவும் ஏற்படுத்தினர் நம் 'தலைவர்கள்.. உண்மையில் அவர்கள் நோக்கம் அதுதான? வாழ்கையில் நம் தலைவர்கள் நோக்கம் வசதி பணம் புகழ் , பல தலை முறைகளுக்கு சொத்து!! நம் தலைவர்கள் நமக்கு செய்த நன்மைகள் அல்லது தீமைகள் அனைத்தையும் இப்போதுள்ள தலைமுறை பெருமளவு உணர்ந்திருக்கின்றனர்.
அவர்கள் கொள்கை வழி நடக்கிறார்களா? இல்லை - தனக்கென்று தனி கொள்கை வைத்திருக்கிறார்கள்! " ஊருக்கு உபதேசமடி பெண்ணே உனக்கிலை! " என்னும் கதை இவர்களுக்குகாகத்தான்.
" ஆறிலும் சாவு நூறிலும் சாவு ; அச்சம் என்பது மடமையடா " என்பது ஊருக்கு உபதேசம்! தனககென்றபோது " ஐயோ கொல்றாங்களே" !!"
இந்த தலைவர்களுக்கு உங்களிடம் வேண்டியது உங்கள் ஓட்டு மட்டும்தான். அதன் பின் செய்யவேண்டியது எல்லாம் 'பகுத்தறிவு வாதிகள்' வேலை. ' நீங்க பாத்துண்டு மட்டும் இருங்க" !
நம் நேரத்தை இவர்களுக்காக செலவு செய்ய வேண்டாம். நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் முன்னேற்ற பாதையிலே பயணம்.
இவர்கள் நம் முதுகு சுமைகள். இவர்கள் பேச்சை கேட்டுகொண்டிருந்தால் நாம் " தமிழ் நாட்டு தவளைகளாக " இருக்க வேண்டியதுதான். "குண்டு சட்டியில் அவர்களுக்கு நாம் குதிரை ஓட்ட வேண்டாம்."
கடவுள் என்னும் உருவற்ற சக்தியை உணர பகுத்தறிவு ஒரு தடைக்கல்!! அந்த உணர்வு நமக்கு வரும் போது வரட்டும். நாம் அதை அப்போது தெரிந்து கொள்வோம்.
" கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக