வியாழன், 26 ஜூலை, 2012

SEA IS FULL OF FISH !!

"கிட்டாதாயின் வெட்டென மற "  என்கிறது நமது தமிழ் பழ மொழி.
" If You love something , set  it free , if it comes back ,its yours , if not, it was never yours from the beginning " என்கிறார்  Rachel Thompson .


என் விஷயத்தில் இந்த அறிவுரையின் தேவை எதுவுமில்லாமலே நான் இருந்தேன்.என் இள வயதில்  நான் காதலித்த பெண்ணை  என் ப்ரெண்டும் காதலித்தான் .  என்னிடமே அவளை எப்படி 'பட்டாய்கலாம் ' என அட்வைஸ் வேறே கேட்பான். என் மற்ற பிரெண்ட்ஸ் என்னிடம் " உனக்கு மூளை இருக்கிறதா ? அவனை ரெண்டு போடாமல் அவனுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறாயே " என்பார்கள். என் பதில் ஒன்றுதான் . " எனக்கு இருக்கும் உரிமை அவள் கல்யாணம் ஆகும் வரை அவனுக்கும் உண்டு. அவளுக்கு என்னிடம்  விருப்பம் இருந்தால் அவன் என்ன செய்ய முடியும். அப்படி அவளுக்கு அவனிடம் அல்லது வேறு யாரிடமோ விருப்பம் ஏற்பட்டால் அது இப்போதே நடக்கட்டும். " என்பேன்.

எங்கள் அலுவலகத்தில் எங்கள் சீனியர் கிளேர்க் இருந்தார்.  . இவன்; அவரிடம் சென்று தனக்கு உதவி செய்ய கேட்டான். விவரம் தெரியாத அவரும் அவள் இருந்த ஆபீஸ் வரை சென்று விட்டு ( ஒன்றும் கேட்காமலேயே) வந்தார். இவனுக்கு ஒரே ஆர்வம். " என்ன சொன்னாள் சார் ?" என்று ஆவலுடன் கேட்டான். " முதலில் கையை கொடு, என்று குலுக்கி விட்டு , " உன்னை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் , ஆனால்  நீ சிகரெட் பிடிப்பதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை" என்றார். எனக்கு ஒரே ஷாக்; இருந்தாலும் மேலே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. சரி, இதை இப்போதே செலேப்ரெட் செய்ய வேண்டும் என்றான் . நான் அவள் இருந்த ஆபீஸ் சென்று அவளிடம் இதை கேட்ட போது அவளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. " இந்த கூத்தை நீங்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்தீர்கள; உங்களுக்கே என் மேல் அன்பு இல்லை  என்று என்மேல்  எரிந்து விழுந்தாள் .

பெண்களுக்கே உரித்தான் அர்த்தமில்லாத சந்தேகத்தில் அவள் என்னிடமிருந்து பின்னர் விலகினாள் . நான் ஒரு காதலியிடம் காட்ட வேண்டிய அளவு அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை என அவள் எண்ணி இருக்கலாம்.  ஆனால் பெரும்பாலான பெண்கள் புகழ்ச்சி வார்த்தைகளுக்குத்தான் நம்பிக்கை வைப்பார்கள் என எனக்கு அப்போது தெரியாது. இப்போதும் புரியவில்லை.தெரிந்திருந்தாலும்  என் இயறகையான குணம் யார் பின்னாலும் போவதல்ல . போகட்டும், நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு வருடம் கழித்து அவள் என் பிரெண்டையே கல்யாணம் செய்தாள் . முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . பின்னர் இதனால் ஏற்பட்ட வலியை மறந்து விட்டேன். இதை படிப்பவர்கள் என்னை பற்றி என்ன எண்ணுவார்கள் என்பதையும் இப்போது நான் யோசிக்கவில்லை . நான் சொல்ல வந்தது எப்படி காதலிக்க வேண்டும் என்பதல்ல. நம்மை ஒருவர் ஒதுக்கி வேண்டாம் என்பதை கூட சொல்ல தேவை இல்லை ; போடா போடா புண்ணாக்கு என்று நடத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.


தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற் பயிற்சி செய்ய செல்வேன். அதை காலை 4 மணிக்கு மாற்றினேன். வேலை இடம் மாறுதல் செய்தேன். எனக்கு பிடித்தமான விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினேன். அவளை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் ஆக்கி கொண்டேன். விரைவில் அந்த உறவின் வலியை மறந்தேன் . 


கடவுள் ஒருவரை தவிர்த்து யாரும் நம்மிடம் 100% அன்பு காண்பிக்க மாட்டார்கள் ; நாம் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையும் அன்பும் வைத்து ஏன் அடி வாங்க வேண்டும். ஒரு முறை என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது , என் நண்பன் அவன் காலேஜ் ப்ரொபசர் " பிள்ளைங்களை  நம்பாதீங்கடா - விளக்கு காட்டி கூட்டிகிட்டு   போய்  குளியில் ( குழியில் ) தள்ளிடுவாங்க " என்றார் என்று சொல்லி சிரித்தான் . கூட இருந்த பெண் நண்பி " தள்ளுவதோடு நிறுத்தமாட்டோம்  " அவள் பாவம் அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்- நான்தான் குழியில் குதித்தேன் " என்று சொல்ல வைப்போம்"  என்றாள்!! 


உண்மையில் நம் மேல் உண்மையான  அன்பு இல்லாதவர்கள் , ( ஆண்/பெண்)  நம் வலியில் அவர்களின் வலிமையைதான் உணர்வார்கள். அவர்கள் மகிழ்ச்சிக்கு நாம் தீனி போடுவது தேவை இல்லாத வேலை. ' என் வழி தனீ வழி " என்று செயல் முறையில் காண்பிப்பது அவசியம். நம்மையே யாருக்கும் படையல் ஆக்க வேண்டிய தேவை இல்லை. 'சமுத்ரம் முழுக்க மீன்கள்! 


புரிந்ததா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக