வியாழன், 26 ஜூலை, 2012

NIGERIAN NEWS!!

ஐந்து  பேர் சேர்ந்தார்கள் என்றால் அனைத்தையும் ஒழித்து விடுவார்கள் என்று  மகாபாரதத்தில் தெரிந்து கொண்டோம். தமிழ் படங்களில் ஐந்து விரல்களையும் ஒன்றொன்றாக சத்தம் வருமாறு மடித்து ஹீரோ குத்தும் போது அதன் சக்தியை உணர்கிறோம். ஐந்தாம் படை, ஐந்தில் வளையாதது ,என ஐந்தின் அளவற்ற சக்தியை பயத்துடன் தெரிந்து உணர்கிறோம். சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறீர்களா ? சொல்கிறேன்.

இன்று காலை," Times of India " வில் ஓர் செய்தி.  ஐந்து மனைவிகள் சேர்ந்து தங்கள் கணவனை கற்பழித்து கொன்றார்களாம் . காரணம் அவன் தன் ஆறாம் காதலிக்கு அதிகமான் அன்பும் அக்கறையும் காண்பிததுதான் . அவன் ஆறாம் மனைவியோடு இருந்த போது மீதி ஐந்து பேரும் கத்தி கபடா உடன்  களமிறங்கி தங்களையும் ' திருப்தி ' செய்ய வேண்டும் என்று அவனை மிரட்டி பணிய வைத்தார்களாம் !  இதன் விளைவு அவன் ஐந்தாம் மனைவியின் 'முறை ' வந்த போது அவன் உயிர் போய் விட்டது! அவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். அடுத்த நாள் அவர்களில் இரண்டு மனைவியரை போலீஸ் கைது செய்தனர் என்று  NIGERIA வின் Daily Post தெரிவிக்கிறது.

ஆபரேஷன்  சக்செஸ்  பேஷண்ட் collapsed என்னும் பழமொழியை அவன் ஐந்து மனைவியரும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

இதே நாளிதழில் அடுத்த பக்க செய்தி Nigeria நயவஞ்சகன் ஓர் பெண்ணை ஏமாற்றி 22 லட்சம் சுருட்டிய விஷயம். செவ்ரோன் ஆயில் கம்பெனி UK விடமிருந்து அந்த பெண்ணிற்கு 85000pounds prize என்று SMS அனுப்பி 22 லட்சம் பரிசு பணத்தை மாற்றுவதற்காக சொன்னதின் பேரில் அந்த பெண்ணும் 22 லட்சம் ரூ கட்டியிருக்கிறார்கள். வந்து சேர்ந்தது என்னமோ ஒரு டெபிட் கார்டு மட்டும்தான். அதன் மூலம் பணம் கிடைக்காத அந்த பெண் கேட்டதிற்கு அவர்களை இன்னும் ஒரு 1.5 லட்சம் செயல் தடங்கல்  ஒன்றை சரி செய்வதற்கு கேட்டிருக்கிறான். சந்தேகம் வந்த அந்த பெண் போலீசிடம்  புகார் செய்ய, பிடி பட்டான் அவன். எனக்கு இந்த மாதிரி நிறையவே ஈ-மெயில் வந்திருக்கின்றன. வாரிசு இல்லாத ஆப்ரிக்கா ராஜா ஒருவர் 25 மில்லியன் dollor  விட்டு சென்றதாகவும் அதை நான் பெற்றுக்கொண்டு அவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் ஈ-மெயில். இதற்கு பதில் அளித்தால் உடனே அந்த பணத்தை மாற்ற நான் 5 லட்சம் அனுப்ப வேண்டும் என பதில் வரும். ஏமாந்தவர்கள் எத்தனையோ. முடிவே இல்லை. இன்னும் நடக்கிறது. என் மகனுக்கு கனடாவில் 8200 $ மாத சம்பளத்தில் ஒரு on -line interview நடத்தி உடனே வேலை உத்திரவும் வந்து விட்டது. விசா வாங்க வேண்டுமென்றால் Rs 34000/- அவர்கள் சொல்லும் அக்கௌன்டிற்கு அனுப்ப வேண்டும் என எ-மெயில். சரி, அக்கௌன்ட் நம்பரும் பெயரும் கேட்டால் , ஒரு nigeriian  பெயரும் Union Bank அக்கௌன்ட் நம்பரும். எத்தனை பேர் அனுப்பி இருப்பார்களோ !!

வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அனைவரும் இந்தியர்களை , முக்கியமாக தென் இந்தியர்களைத்தான். நம்பி இந்த மோசடியை நடத்துகிறார்கள். போதாததற்கு Drug smuggling வேறே. Nigerians அனைவரும் இப்படிதானா ? தெரியவில்லை.

ஒன்று நிச்சயமாக புரிகிறது. இந்த விஷயம் மட்டும் இல்லை. நம் மனது ஆசையின் வசம் சிக்கும் போது அறிவின் செயல் திறனிழந்து விடுகிறது. எல்லா விஷயங்களிலும் 10% சந்தேகம் எப்போதும் வைத்திருந்தால் ஒருக்கால் இந்த குழிகளிலிருந்து தப்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக